திபெத்தின் இலட்சக்கணக்கான அடிமைகள் விடுதலை பெற்றதற்கான முதலாவது நினைவு நாளை முன்னிட்டு, திபெத்தின் ஜனநாயக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கிராமமான சான்நான் பிரதேசத்தின் சாங்சூ வட்டத்தைச் சேர்ந்த க்சூன் கிராமவாசிகள் வெளிப்படையான கடிதத்தை வெளியிட்டனர். பழைய மற்றும் புதிய திபெத்தில் தமது அனுபவங்களை மாதிரியாக கொண்டு, விடுதலை பெற்ற அடிமைகள் இன்பமான வாழ்வைப் பேணிமதித்து, சோஷலிச தனிச்சிறப்பியல்புகளோடு அமைகின்ற புதிய தாயகத்தை கட்டியமைக்க வேண்டுகோள் விடுத்தனர்.
தாலாய் லாமா குழு, திபெத் மக்களுக்கு நலன்கள் தரும் எந்தவித செயல்பாடுகளையும் புரியாமல் இருப்பது மட்டுமல்ல, நாம் பெற்றுள்ள இணக்கமான இன்பமான புதிய வாழ்வையும் இடைவிடாமல் சீர்குலைத்து வருகிறது. விடுதலை பெற்ற இலட்சக்கணக்கான அடிமைகள், கம்யூனிஸ்ட் கட்சியோடு, நெருங்கிய ஒற்றுமைக்கொண்டு, சோஷலிச அமைப்பு முறையை உறுதிப்படுத்துமாறு இவ்வெளிப்படையான கடிதம் வேண்டுகோள் விடுத்தது.
|