ஜெர்மனியின் Junge welt செய்தியேடு 27ம் நாள், அடிமை அமைப்பு முறையின் முடிவு என்னும் கட்டுரையை வெளியிட்டு, திபெத்தின் இலட்சக்கணக்கான அடிமைகள் விடுதலை பெற்றதன் வரலாற்று முக்கியத்துவத்தைப் பாராட்டியது.
ஜெர்மனியின் சீன மொழியியல் நிபுணரும், மார்பேக் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியருமான ஹன்ஸ் ஹெயின்ஸ் ஹோல்ஸ் இக்கட்டுரையை எழுதினார்.
அடிமை அமைப்பு முறை நீக்கப்பட்டது, மனித உரிமையின் வெற்றியாகவும், ஐ.நா சாசனத்தின் இலக்கு நிறைவேறுவதாகவும் அமைந்தது. தாலாய் லாமாவின் முன்தைய இல்லமாகவும் உரிமையின் சின்னமாகவும் இருந்த போத்தாலா மாளிகை, இன்று அருங்காட்சியகமாக மாறியுள்ளது. இது, புதிய காலம் தொடங்கியதன் அடையாளமாகும் என்று இக்கட்டுரை சுட்டிக்காட்டியது.
|