50 ஆண்டுகளுக்கு முன், திபெத்தில் நடைபெற்ற ஜனநாயக சீர்திருத்தத்தை நினைவு கூரும் வகையில், திபெத்தின் இலட்சக்கணக்கான பண்ணை அடிமைகள் விடுதலை பெற்ற நாளாக மார்ச் 28 நாளை நிறுவி இனி ஆண்டுதோறும் கொண்டாடுவது தொடர்பான தீர்மானத்தை, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் மக்கள் பேரவை இவ்வாண்டின் ஜனவரி திங்கள் ஏற்றுக்கொண்டது. 28ம் நாள், இலட்சக்கணக்கான திபெத் பண்ணை அடிமைகள் விடுதலை பெற்ற முதலாவது நினைவு நாளாகும். இதற்கான கொண்டாட்ட கூட்டம் இன்று லாசா நகரில் நடைபெற்றது. திபெத் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியை தொடர்ந்து முன்னேற்ற பாடுபடுவோம். 2020ம் ஆண்டுக்குள் ஓரளவு வசதியான சமூகத்தைப் பன்முகங்களிலும் உருவாக்கும் இலக்கு திபெத்தில் நனவாக்கப்படும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் குழுவின் செயலாளர் Zhang Qingli கூட்டத்தில் தெரிவித்தார்.
திபெத்தின் பல்வேறு துறைகளிலிருந்து வந்த 13ஆயிரத்துக்கு மேலான பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். விடுதலையை பெற்ற இலட்சக்கணக்கான பண்ணை அடிமைகளின் பிரதிநிதி என்ற முறையில், 69 வயதான முதியவர் Tsondre, பழைய திபெத் சமூகத்தில் தான் அனுபவித்த துயரமான அனுபவம் பற்றி இக்கூட்டத்தில் விபரித்தார். அவர் கூறியதாவது:
திபெத்தின் பழைய சமூகத்தில், என்னை போன்ற எண்ணற்ற அடிமைகள், பரம்பரை பரம்பரையாக, பண்ணை உரிமையாளர்களுக்கு அடிமையாகி, சுரண்டப்பட்டு, அடக்கப்பட்டிருந்தனர். பாழடைந்த அல்லது புகை நிறைகின்ற இருண்ட சிறிய அறைகளில், நாங்கள் வாழ்ந்தோம். விலங்குகளுடனும் வாழ்ந்திருந்தோம். பல்வேறு பெரிய கோயில்களிலும் பிரபுக்களின் வீட்டுகளிலும் அடிமைகளை தண்டிக்கும் இடங்கள் உருவாக்கப்பட்டன. கண்களை பிடுங்குவது, காது, கால், கை ஆகியவை வெட்டப்படுவது போன்ற தண்டனைகளை நாங்கள் பெற்றோம் என்றார் அவர். அப்போது, திபெத்தில் 5விழுக்காட்டுக்கு குறைவான பண்ணை உரிமையாளர்கள் மிகப் பெரும்பாலான உற்பத்தி மூலவளங்களை கொண்டிருந்தனர். இதற்கு மாறாக, திபெத்தில் 95 விழுக்காட்டுக்கு மேலான அடிமைகள், சமூகத்தின் மிகவும் தாழ்ந்த நிலையில் மோசமான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். உற்பத்தி, தனிநபர் சுதந்திரம், உயிர் பாதுகாப்பு போன்ற உரிமைகள் அவர்களுக்கு இல்லை.
1951ம் ஆண்டு, சீன நடுவண் அரசும் திபெத் உள்ளூர் அரசும், அமைதியான முறையில் திபெத்தை விடுதலை செய்வது பற்றிய உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. ஆனால், 1959ம் ஆண்டு, ஏகாதிபத்தியம் தூண்டியதால், திபெத்தின் உயர்நிலை ஆட்சி குழு ஆயுத கலகத்தை நடத்தியது. நடுவண் அரசு கலகத்தை அமைதிப்படுத்தியதோடு, பொது மக்கள் பங்கெடுக்கும் ஜனநாயக சீர்திருத்தத்தை திபெத்தில் நடைமுறைப்படுத்தியது. அரசியல் மற்றும் மதம் ஒருங்கிணைந்த நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறை அப்போது முதல் முற்றாக நீக்கப்பட்டது. ஜனநாயக சீர்திருத்தம், உலக மனித உரிமை இலட்சியத்துக்கு சீனா ஆற்றிய மாபெரும் பங்காகும் என்று Zhang Qingli தெரிவித்தார். அவர் கூறியாதவது:
நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையை நீக்கி, இலட்சக்கணக்கான பண்ணை அடிமைகளை விடுதலை செய்திருப்பது, உலகில் அடிமை முறையை ஒழிக்கப்பட்ட வரலாற்றில் முக்கிய மைல் கல்லாகும். சர்வதேச மனித உரிமை இலட்சியத்தின் முக்கிய முன்னேற்றமாகும் என்றார் அவர்.
திபெத் ஜனநாயக சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட 50 ஆண்டுகளில், திபெத்தில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டன. 2008ம் ஆண்டு, திபெத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு, சுமார் 3ஆயிரத்து 960கோடி யுவானாகும். இது, 1959ம் ஆண்டில் இருந்ததை விட 65 மடங்கு அதிகரித்துள்ளது. வாழ்க்கை மற்றும் மருத்துவ நிலைமை உயர்ந்ததுடன், உள்ளூர் மக்களின் சராசரி ஆயுட்காலம், 36வயதிலிருந்து 67வயதாக அதிகரித்திருக்கிறது. திபெத் தன்னாட்சிப் பிரதேசம், நகரம் மற்றும் மாவட்டம் ஆகிய 3 நிலை அரசு நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்களில், திபெத் இனம் மற்றும் இதர சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் சுமார் 78 விழுக்காடு வகிக்கின்றனர். திபெத் பண்பாடும் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றது. போத்தலா மாளிகை உள்ளிட்ட புகழ்பெற்ற வரலாற்று சின்னங்கள் மற்றும் தொல் பொருட்களுக்கான பாதுகாப்பிற்கு நடுவண் அரசு மாபெரும் நிதியை ஒதுக்கியது. திபெத்தியல் ஆராய்ச்சி இலட்சியம் முன்னென்றும் கண்டிராத வேகமாக வளர்கின்றது.
தவிர, தலாய் லாமா குழுவுக்கு எதிரான போராட்டம், தேசிய இனம், மதம், மனித உரிமை ஆகிய பிரச்சினைகள் அல்ல. நாட்டின் இறையாண்மையையும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டையும் பேணிக்காக்கும் போராட்டமாக, உள்ளது என்று Zhang Qingli வலியுறுத்தினார்.
|