• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-28 16:23:00    
அடிமைகள் விடுதலை

cri

திபெத்தின் இலட்சக்காணக்கான பண்ணை அடிமைகளின் விடுதலை விழாவை நினைவு கூரும் கொண்டாட்டம் 28ம் நாள் முற்பகல், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான லாசாவில் ஆரவாரமாக நடைபெற்றது. பல்வேறு துறைகளின் 13 ஆயிரம் பிரதிநிதிகள் இக்கொண்டாட கூட்டத்தில் பங்கெடுத்தனர்.

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் Qangba Puncoq இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். இதில், பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் உரை நிகழ்த்தினர்.

திபெத்தின் ஜனநாயகச் சீர்திருத்தம், உலகில் அடிமை அமைப்புமுறையை ஒழிக்கின்ற இயக்கத்தின் முக்கிய மைகல்லாகும். சர்வதேச மனித உரிமை இலட்சியத்தின் முக்கிய முன்னேற்றமாகவும் இது விளங்குகின்றது. உலகின் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மனித உரிமை இலட்சியத்துக்கு சீனா ஆற்றிய முக்கிய பங்காகும் என்று திபெத்தின் கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டியின் செயலாளர் Zhang Qingli உரையாற்றிய போது தெரிவித்தார்.

கடந்த 50 ஆண்டுகளில், திபெத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய இலட்சியங்கள், மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளன. திபெத்தின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றத்தை சீனா தொடர்ந்து விரைவுபடுத்தும். தவிர, நாட்டின் பாதுகாப்பு மற்றும் திபெத்தின் நிதானத்தை உத்தரவாதம் செய்ய சீனா முழு மூச்சுடன் பாடுபடும் என்று Zhang Qingli தெரிவித்தார்.