• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-29 17:13:13    
பொன் விழாவுக்கான கலை நிகழ்ச்சி

cri

சீனாவின் திப்த்தின் இலட்சக்கணக்கான பண்ணை அடிமைகள் விடுதலை பெற்ற பொன் விழாவை கொண்டாடும் வகையில் சூலியனை நோக்கி முன்னேறுவோம் என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சி மார்ச் 28ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவருமான சியாச்சிங்லிங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் மத்திய அரசியல் மற்றும் சட்ட ஆணையத்தின் செயலாளருமான சோயுன்காங் ஆகியோரும் பெய்ஜிங் மாநகரின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேரும் இந்த கலைநிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். திபெத்தின கலைஞர் சாதான் தோல்மா விடுதலை பெற்ற பண்ணை அடிமைகள் பாடுபடுவதென்ற பாடலை பாடி பண்ணை அடிமைகள் புத்துயிரை பெற்ற மகிழ்ச்சியை பாடல் மூலம் விபரமாக வர்ணித்தார்.

எங்கள் தேசத்தை நேசிக்கின்றோம் என்ற பாடலும் 56 தேசிய இன நடிகர்கள் மற்றும் நடிகைகள் அரங்கேற்றிய அருமையான நடனங்களும் கலை நிகழ்ச்சியை உச்ச நிலைக்கு தூண்டின. உணர்ச்சிமிக்க மக்கள் அனைவரின் ஒத்த கருத்துக்களை அணிதிரட்ட வல்ல சூழ்நிலை கலை நிகழ்ச்சியுடன் இணைந்தது. திபெத்தின் அருமையான காலத்தின் மீதான மக்களின் உறுதியான நம்பிக்கை முழு கலை நிகழ்ச்சியின் மூலம் காணப்பட்டுள்ளது.