ஹெந்து செய்தி யேட்டின் தலைமைப் பதிப்பாசிரியர் Thiru N Ram 28ம் நாள் திபெத் சமூகத்தின் விடுதலையை கொண்டாடுவது என்ற தலையங்கத்தை இயற்றினார். பண்ணை அடிமை அமைப்பு முறைக்கான தலாய்லாமா குழுவின் பூசிமெழுகுடன் வரலாற்று உண்மைகளை ஒப்பிட்டு பார்த்து, திபெத் ஜனநாயக் விடுதலை அரசியல் பிரச்சாரமாக்கி, திபெத்தில் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை அமைப்பு முறை நிலவ இல்லை போன்ற தலாய்லாமாவின் கூற்றுகளை தலையங்கம் மறுத்துரைத்துள்ளது.
1959ம் ஆண்டு வரை, திபெத்தில் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை அமைப்பு முறை நிலவியது. பல வரலாற்று ஆவணங்களும் தகவல்களும், மேலை நாடுகளின் சில ஆய்வு பயண நிபுணர்கள் மற்றும் அறிவாளர்கள், பழைய திபெத்தில் பயணம் மேற்கொண்ட செய்தியாளர்கள் ஆகியோர் இந்த அமைப்பு முறையை உறுதிப்படுத்தியுள்ளனர் என்று தலையங்கம் கூறியது.
திபெத் உண்மைகளை தேட விரும்புகின்ற மக்கள் இந்த வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்று தலையங்கம் சுட்டிக்காட்டியது.
|