• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-30 11:39:32    
விவசாயிகளின் வாழ்க்கை

cri
சீனா, ஒரு பெரிய வேளாண் நாடாக இருக்கிறது. கிராமப்புற பிரதேசங்கள், சீனாவின் நிலப்பரப்பில் பெரும் பகுதி வகிக்கிறன. 130 கோடி சீனாவின் மக்கள் தொகையில் விவசாயிகள் எண்ணிக்கை,பெருமளவு உள்ளனது. கடந்த சில ஆண்டுகளில், கிராமப்புறங்களில் பல முக்கிய பண்பாட்டுத் திட்டப்பணிகளை மேற்கொண்டு, அடிப்படை வசதிக் கட்டுமானங்களை மேம்படுத்தி, விவசாயிகளின் வாழ்க்கையை செழுமையாக்க சீன அரசு பாடுபட்டு வருகிறது. அதற்குப் பின், கிராமப்புற பண்பாட்டுக் கட்டுமானத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த திட்டப்பணிகள், விவசாயிகளால் மிகவும் வரவேற்கப்பட்டுகின்றன.

சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில், அறிவியல் வசதிகள், தொழில் நுட்பம், தகவல் தொடர்பு வசதிகள் குறைவாக இருப்பதால், விவசாயிகள் அடிக்கடி பல்வகை இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். இதனால், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது கடினமாகியுள்ளது. மேலும் தேவையான நிறைந்த பண்பாட்டு நடவடிக்கைகள் குன்றிய நிலைமை, கிராமப்புறங்களில், குறிப்பாக, மலை மற்றும் தொலைதூர பிரதேசங்களில் பரவலாக நிலவி வருகிறது. சீன சமூகப் பொருளாதார வளர்ச்சியில், கிராமப்புறப் பண்பாட்டுக் கட்டுமானக் கடமை மிகவும் கடினமானது.

செய்தியேடு, இசை நாடகம், திரைப்படம், தொலைகாட்சி, அறிவியல் பண்பாட்டு பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம், விவசாயிகளின் பண்பாட்டு உரிமை நலன்கள் பாதுகாக்கப்படலாம். எனவே, கிராமப்புறப் பண்பாட்டுக் கட்டுமானத்தை சீன அரசு, முக்கியமாக வளர்த்து வருகிறது.

 

சில ஆண்டுகளுக்கு முன்புதான், நாட்டின் பண்பாட்டுத் தகவலைக் கூட்டாக அனுபவிக்கும் திட்டப்பணியை, சீன பண்பாட்டு மற்றும் நிதி அமைச்சுகள் மேற்கொண்டுள்ளன.

 

நண்பர்களே, விவசாயிகளின் வாழக்கை என்ற தகவலை அறிந்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.