• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-30 17:12:04    
திபெத் பற்றிய மனப்பதிவு

cri

லாசா

(சீன வானொலி  நிலையம்)

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான லாசா, ஏறக்குறைய 1300 ஆண்டுகால வரலாறு கொண்ட பண்டைய நகராகும். இந்நகரம், யார்லுங்ட்சாங்போ ஆற்றின் கிளையான லாசா நதியின் வட கரையில் இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 3650 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு, வரலாற்றுச் சிறப்பும் அழகும் வாய்ந்த காட்சித்தலங்கள் பல காணப்படுகின்றன. மக்களில் 87 விழுக்காட்டினர், திபெத் மரபுவழி புத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர். சீனாவின் சிறந்த சுற்றுலா நகர் பெயர்ப் பட்டியலில் லாசாவும் இடம்பெறுகிறது. அதேவேளையில், இந்நகரம், ஐரோப்பியப் பயணிகள் மிகவும் விரும்புகின்ற சுற்றுலா நகரங்களில் ஒன்றாகியுள்ளது.

ஷிகாசெ

(சீன வானொலி  நிலையம்)

ஷிகாசெ பிரதேசம், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தென் மேற்குப் பகுதியில் உள்ளது. திபெத்திலிருந்து சோமோலங்மா சிரத்தில் ஏறிசெல்லும் போது, ஷிகாசெ வழியாகதான் செல்ல வேண்டும். நீண்டகால வரலாறு கொண்ட சாக்கிய துறவியர் மடம் மற்றும் தாஷில்ஹூன்போ துறவியர் மடம், திபெத் மரபுவழி புத்தமத வளர்ச்சி வரலாற்றில், முக்கியத்துவம் வாய்ந்தவை.

லோகா

(சீன வானொலி  நிலையம்)

லோகா பிரதேசம், யார்லுங்ட்சாங்போ ஆற்றின் நடு மற்றும் கீழ் பகுதிகளில் இருக்கிறது. திபெத்தினம் உருவாகிய தொட்டில் பன்பாடு தோன்றிய இடமாகவும் லோகா பிரதேசம் திகழ்கிறது. கம்பீரமான, அழகான மலை மற்றும் ஆறுகள் மட்டுமல்ல, புனிதமான ஏரிகளும் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றன. தவிர, ஆதிகால காடு, கண்கொள்ளா புல்வெளி, யார்லுங் ட்சாங்போ ஆற்றின் அருவி, உலகில் புகழ் பெற்ற தொல் பொருட்கள் உள்ளன. வரலாற்றுக் காட்சித் தலங்கள் ஆகியவை இங்கு இடம் பெறுகின்றன. எனவே, பொழுதுபோக்கு, ஓய்விடம், சுற்றுலா, அறிவியல் தொழில் நுட்பச் சோதனை மற்றும் ஆய்வுப் பயண நடவடிக்கைகள் நிறைந்த இடமாக லோகா விளங்குகிறது.  

நிங்ச்சி

(சீன வானொலி  நிலையம்)

நிங்ச்சிப் பிரதேசம், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தென் கிழக்குப் பகுதியில் இருக்கிறது. யார்லுங் ட்சாங்போ ஆற்றின் நடு மற்றும் கீழ் பகுதிகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 152 மீட்டர் முதல் 3000 மீட்டர் வரை உயரமான நிலையில், நிங்ச்சி அமைகிறது. நல்ல காலநிலையின் காரணமாக, எழில் மிக்க இயற்கைக் காட்சிகளை மக்கள் நன்றாக அனுபவிக்கலாம். திபெத் மரபுவழி புத்தமத கோயில்கள் பல இங்கு உண்டு. இத்தகைய கோயில்களை விட, மேலும் நீண்டகால வரலாறு கொண்ட கோயில் ஒன்றும் அங்குள்ளது. அதன் பெயர் பான் மதக் கோயில். பண்பாட்டு காட்சித் தலங்களோடு, நிங்ச்சியின் இயற்கைக் காட்சிகளும் மிகுந்த ஈர்ப்பு ஆற்றல் கொண்டவை. நம்ஜியாக்பர்வா சிகரம், யார்லுங் ட்சாங்போ ஆறு, பாசும் கோ ஏரி முதலியவை இதில் அடங்குகின்றன.

சம்தோ

(சீன வானொலி  நிலையம்)

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வட பகுதியிலுள்ள சம்தோ, இத்தன்னாட்சிப் பிரதேசத்தின் கிழக்கு வாயிலாக அழைக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், இப்பிரதேசத்தின் ஆண்கள் அனைவரையும் கவரக்கூடியவர்களாக கருதப்படுகின்றனர். இங்கு விமான நிலையம் அமைந்துள்ளதால், மேலதிகமான சுற்றுலாப் பயணிகளை சம்தோ தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

நக் ச்சு

(சீன வானொலி  நிலையம்)

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வட பகுதியிலுள்ள நக் ச்சுப் பிரதேசம், சின் காய் திபெத் பீடபூமியின் மைய பகுதியாக விளங்குகிறது. தங்குலா மலை, நையின் சென் தங்குலா மலை மற்றும் கங்தேசெ மலை குறுக்கும் நெடுக்குமாக உள்ள இடத்தில், நக் ச்சு அமைந்துள்ளது. இதனால், மாபெரும் மலைகளும், வளைந்து நெளிந்தோடும் ஆறுகளும் கூடி அமைந்துள்ளதை அங்கு காணமுடியும். பீடபூமியிலுள்ள ஏரிகள் மற்றும் வனக் கடலில், நக் ச்சு மூழ்கியுள்ளது. நக் ச்சு நகரில் வாழ்கின்ற மக்கள் பாடுவதில் சிறந்து விளங்குகின்றனர்.

நாரி

(சீன வானொலி  நிலையம்)

நாரி பிரதேசம், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ளது. இமயமலை, கங்தேசெ மலை, காராகோரம் மலைத்தொடர் ஆகிய மலைகள் இணையும் இடத்தில் உள்ளது. நாரி, கடல் மட்டத்திலிருந்து 4500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஆயிரக்காணக்கான மலைகளின் உச்சியாகவும், கணிசமான ஆறுகளின் துவக்கமாகவும் நாரி புகழ் பெற்றுள்ளது. அதேவேளையில், இது உலகின் கூரை என அழைக்கப்படுகின்றது. அங்கு, அற்புதமான குகெ அரசாட்சி மாளிகை, கோயில்கள் முதலியவை, எண்ணற்ற மக்களை ஈர்த்து வருகின்றன. திபெத்தின் உண்மையான காட்சியை இரசிக்க வேண்டுமனால், நாரியில் பயணம் மேற்கொண்டு, அழகான காட்சிகளைக் கண்கூடாக அனுபவிப்பது இன்றியமையாதது.