• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-30 10:16:47    
சர்வதேச நீச்சல் சம்மேளனத்தின் நீர் குதிப்பு தொடர்போட்டி

cri
2 நாள் நீடித்த 2009ம் ஆண்டு சர்வதேச நீச்சல் சம்மேளனத்தின் நீர் குதிப்பு தொடர்போட்டியின் தோஹா போட்டி, 23ம் நாள் முடிவடைந்தது. சீன அணி, இப்போட்டியின் 8 தங்கப்பதக்கங்கள் அனைத்தையும் பெற்றது.
இப்போட்டிக்கு பின், சீன அணி, உடனடியாக சீனாவுக்கு திரும்பி, மார்ச் 27, 28ம் நாட்களில் சீனாவின் சாங் சோ நகரில் நடைபெறவுள்ள தொடர்போட்டியின் 2வது போட்டிக்கு ஆயத்தம் செய்கின்றது.

2009ம் ஆண்டு சீன தேசிய தேய்குவாண்தோ சாம்பியன் பட்டபோட்டி, 22ம் நாள் சீன கிழக்குப்பகுதியிலுள்ள ஜியாங் சூ மாநிலத்தின் சு சாவ் நகரில் முடிவடைந்தது. உடல் ஒலக் குறைவால், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற ஊ ஜின் யு, மகளிர் 53 கிலோகிராம் எடைப்பிரிவு போட்டியிலிருந்து விலகினார். ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சாம்பியன் வீராங்கனை லோ வெய் மகளிர் 73 கிலோகிராம் எடைப்பிரிவு போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார்.

அணிகளுக்கிடைபோட்டியின் 30வது சுற்றுப்போட்டி முடிவடைந்தது. TOTTENHAM HOTSPUR அணி, 1-0 என்ற கோல்கணக்கில், CHELSEA அணியை எதிர்பாராதவிதமாய் தோற்கடித்தது. MANCHESTER UNITED அணி, 0-2 என்ற கோல்கணக்கில் FULHAM அணியிடம் தோல்வியடைந்தது. இது கடந்த 47 திங்களில், 2 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைவது, இது முதன்முறையாகும்.
இங்கிலந்து கால்பந்து அணியின் பயிற்சியாளர் காபல்லோ, 23ம் நாள், புதிய தேசிய அணியின் பெயர்பட்டியலை வெளியிட்டார். MANCHESTER UNITED அணியின் கோல் காப்பாளர் பென் ஃபாஸ்டர் முதன்முறையாக தேசிய அணியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார். திட்டப்படி, நடப்பு வார இறுதியில் அங்கிலாந்து அணி, ஸ்லோவாக்கிய அணியுடன் நட்புப்போட்டியில் பங்கேற்கும். ஏப்ரல் முதல் நாள், உக்ரேன் அணியுடன், 2010ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான தேர்வு போட்டியில் கலந்துகொள்ளும்.

ஆடவர் மற்றும் மகளிர் கைப்பந்து அணிகளின் புதிய தலைமை பயிற்சியாளரின் பெயர்பட்டியலை சீன கைப்பந்து சம்மேளனம், 23ம் நாள் பெய்ஜிங்கில் வெளியிட்டது. முன்னாள் சீன இளம் மகளிர் கைப்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் சே பின், புகழ்பெற்ற பயிற்சியாளர் சேன் சுங் ஹோவிற்கு பதிலாக, சீன மகளிர் கைப்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக மாறினார். சோ ச்சியன் அன், சீன ஆடவர் கைப்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக தொடர்கிறார்.