திபெத் சமூகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிக்கையை, சீனாவின் மிகச் செல்வாக்கு வாய்ந்த திபெத்தியல் ஆய்வு நிறுவனமான சீனத் திபெத்தியல் ஆய்வு மையம் 30ஆம் நாள் வெளியிட்டது. சமூக அமைப்புமுறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி நிலை ஆகியவற்றின் மூலம், திபெத் பொருளாதார வளர்ச்சியின் நிகழ்வு நிலை, பெற்றுள்ள சாதனைகள், எதிர்நோக்குகின்ற அறைகூவல்கள் ஆகியவற்றை, இவ்வறிக்கை பன்முகங்களிலும் விளக்கி, ஆராய்ந்து, தொகுத்துக் கூறியது. நடுவண் அரசு மற்றும் சகோதர மாநிலங்களின் பேராதரவில், திபெத்தின் பொருளாதார அதிகரிப்பு தொடர்ந்து உயர் நிலையில் இருக்கும் என்று, அறிக்கை கருத்து தெரிவித்துள்ளது.
திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த 50 ஆண்டுகளில், சமூகத்தின் செழிப்பு, மக்களின் வாழ்க்கை நிலை மேம்பாடு, உரிமைநல உத்தரவாதம் ஆகியவை திபெத்தின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன என்று மேற்கூறிய அறிக்கை சுட்டிக்காட்டியது. 1959ம் ஆண்டு ஜனநாயகச் சீர்திருத்தத்தின் மூலம், நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை அமைப்புமுறை நீக்கப்பட்ட பின், உள்ளூர் உற்பத்தி ஆற்றல் பெருமளவில் அதிகரித்துள்ளது. அத்துடன், திபெத் பொருளாதாரம் முன் கண்டிரா வேகத்துடன் அதிகரித்துள்ளது. திபெத் மக்களின் நபர்வாரி மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு, நபர்வாரி வயது, நபர்வாரி கல்வி நிலை ஆகியவற்றில், சாராம்ச ரீதியான முன்னேற்றங்கள் காணப்படுள்ளன.
இது பற்றி, சீனத் திபெத்தியல் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் சு ஷியௌமிங் கூறியதாவது
திபெத் தன்னாட்சிப் பிரதேசம் மற்றும் மாநிலத்தின் சமூகப் புரட்சியின் ஆழம் மற்றும் காலத்தின் கோணங்களிலிருந்து பார்த்தால், திபெத், நாடளவில் மிக ஆழமான வளர்ச்சி பெற்ற பிரதேசங்களில் ஒன்றாகும். திபெத், நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை சமூகத்திலிருந்து சோஷியலிசத்தின் ஆரம்ப கட்டத்தில் நுழைந்தது. பரந்த அளவிலான மத நம்பிக்கை கொண்ட இனப் பிரதேசத்தில் இத்தகைய ஆழமான சமூகப்புரட்சியை வெற்றிகரமாக மேற்கொள்வது, மிகக் கடினமானது. எனவே, இதை சுமூகமாகவும் நிதானமாகவும் நிறைவேற்ற, நடுவண் அரசு உள்ளூர் நிலைமைக்கு பொருந்திய வேறுபட்ட கொள்கைகளை மேற்கொண்டது என்று சு ஷியௌமிங் கூறினார்.
சின் காய்-திபெத் பீடபூமி, ஆசியாவின் பல ஆறுகளின் ஊற்றுமூலம் மற்றும் மேற்பகுதியாகும். இது, ஆசியாவில் வாழும் பல நூறு கோடி மக்களின் உயிர் வாழ்வுக்கு இன்றியமையாத இயற்கை நீர் மூலவளமுமாகும். எனவே, திபெத், மிக முக்கியமான சுற்றுச்சூழல் தகுநிலையை கொள்கிறது. திபெத் உள்ளுர் மூலவளத்தின் செலவு மற்றும் சுற்றுச்சூழல் நிர்ப்பந்தத்தை தணிவுச் செய்து, திபெத்தின் சுற்றுச்சூழல் மற்றும் உயிரின வாழ்க்கையை பாதுகாக்கும் வகையில், நடுவண் அரசும்ம சகோதர மாநிலங்களும் பேராதரவு அளித்து வருகின்றன. அத்துடன், உயிரின வாழ்க்கைச்சூழலை பாதிக்காமல் தடுக்கும் வகையில், சுற்றுலா, திபெத் மருந்து, திபெத் உள்ளிட்ட உயிரின வாழ்க்கைச்சூழல் துறையை முன்னுரிமையுடன் வளர்க்கும் உத்தியையும் திபெத் உறுதிப்படுத்தியது.
அண்மையில், திபெத் உயிரின வாழ்க்கை பாதுகாப்புக் கவசம் மற்றும் கட்டுமான வரைவுத் திட்டத்தை, நடுவண் அரசு வெளியிட்டது. 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முயற்சியில், திபெத்தை, உயிரின வாழ்க்கைச்சூழல் பாதுகாப்பு இடமாக கட்டிமையக்க நடுவண் அரசு திட்டமிடுகிறது.
தற்போதைய காலகட்டத்தில், திபெத்தின் நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையில் சமனற்ற வளர்ச்சி என்ற நிலை இன்னும் மிகத் தெளிவாக உள்ளது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியது. தவிர, மக்களின் கல்வி மற்றும் உடல் நலநிலையின் குறைவு, பொருளாதார வளர்ச்சியை கட்டுப்படுத்தும் மனித வளப் பற்றாக்குறை ஆகிய காரணங்களை நீக்க, பெருமளவில் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி, சீனத் திபெத்தியல் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் லோரோங் திரதுல் கூறியதாவது
நடுவண் அரசும் சகோதர மாநிலங்களும் திபெத்தில் நிதி பரிமாற்றம், ஒன்றுக்கு ஒன்று சிறப்பு ஆதரவு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டன. இது, திபெத்திற்கு அதிக வளர்ச்சி வாய்ப்பையும் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டின் மார்ச் 14ம் நாள் நிகழ்ந்த அடிதடி,சீர்குலைத்தல்,கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்முறைச் சம்பவத்தால், திபெத் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது. அதன் விளைவாக, திபெத் சுற்றுலாத் துறை இன்னல் மிக்க நிலைமையை தற்காலிகமாக எதிர்நோக்கியது. இருந்த போதிலும், இதர துறைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. எதிர்வரும் 2 ஆண்டுகளில், நடுவண் அரசு திபெத்திற்கு 8ஆயிரம் கோடி யுவான் நிதியுதவியை வழங்கும். எனவே, இத்தகைய மாபெரும் நிதி ஒதுக்கீட்டுடன், திபெத் பொருளாதாரம் உயர் நிலையில் விரைவாக அதிகரிக்கும் என்று நம்பலாம்.
|