• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-31 16:13:55    
ச்சிங் வம்சக்காலத்திலான யோங்லிங் கல்லறை (ஆ)

cri

தற்போதைய யோங்லிங் கல்லறையின் பழைய கட்டிடங்கள், சியாமாபெய் கல்வெட்டு, சியன்கொங்யுவான் முற்றம், ஃபாங்சேங் நகர், பாவ்சேங் நகர் முதலிய இடங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் பரப்பளவு, சுமார் 11 ஆயிரம் சதுர மீட்டராகும்.

சின்கொங் மண்டபத்திற்கு முன்னால் ஒரு கிலோமீட்டர் தூரத்தில், இரு சியாமாபெய் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த இரண்டிற்கும் இடையில், 120 மீட்டர் இடைவெளி இருக்கிறது. அவற்றில் மேல், மான், மங்கோலிய, ஹான், திபெத், உய்கூர் ஆகிய ஐந்து இனங்களின் எழுத்துக்களால் கட்டுரைகள் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு கல்வெட்டுகளுக்கு வடக்குப் பகுதி, இக்கல்லறையின் முக்கிய வாயிலாகும். அது, ச்சேங்ஹொங்மேன் எனவும், ச்சியன்கொங்மேன் எனவும் அழைக்கப்படுகிறது.

ச்சேங்ஹொங்மேனின் வழியாக சென்றால் கல்லறைப் பிரதேசத்தில் நுழையலாம். அது, சியன்கொங்யுவான் முற்றம், ஃபாங்சேங் நகர், பாவ்சேங் நகர் ஆகிய மூன்று பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளது.

யோங்லிங் கல்லறை, மான் இனத்தின் மூதாதையர் வழங்கிய வரலாற்றுப் பண்பாட்டு மரபுச் செல்வமாகும். தற்போது நாட்டின் முக்கியத் தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவாக உள்ளது. உலகப் பண்பாட்டு மரபுச் செல்வமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.