லாசா நகரம், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் மட்டுமல்ல, திபெத்தின் அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு மையமும் ஆகும். அது, உலகின் மிகவும் தனிச்சிறப்பு மற்றும் ஈர்ப்பு ஆற்றல் வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும். இதற்கு, கடல் மட்டத்திலிருந்து 3700 மீட்டர் உயரமான இடத்தில் அமைந்திருக்கும் காரணம் தவிர, 1300 ஆண்டுகால பண்பாட்டுச் சிதிலங்கள் மற்றும் மதச் சூழ்நிலையும், அதன் ஈர்ப்பு ஆற்றலின் ஊற்றாகும்.
போத்தலா மாளிகை, பர்கோர் தெரு, ஜோகாங் கோயில், சேரா துறவியர் மடம், திரேபுங் துறவியர் மடம் முதலிய இடங்கள், மக்களுக்கு ஆழ்ந்த மனப்பதிவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த இடங்களுக்கு சென்றதால்தான், லாசாவின் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூற முடியும்.
போத்தலா மாளிகை, 7வது நூற்றாண்டில் திபெத் மன்னர் சொங்ஸ்தான் கம்போ, சீன வம்சத்தின் இளவரசி wenchengஉடன் திருமணம் செய்வதற்காகக் கட்டியமைக்கப்பட்டது. 3 இலட்சத்து 60 ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்புள்ள இந்த மாளிகை, உலகில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் அமைந்த மாளிகை கட்டிடத் தொகுதியாகும். அதில், அதிக புத்தர் சிலைகள், சுவர் சித்திரங்கள், திருமறைகள், நகைகள் முதலிய செல்வங்கள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. அவை மிக அதிக கல்வியல் மற்றும் கலை மதிப்பு கொண்டவையாகும்.
இரவில் போத்தலா மாளிகை(Gettyimages)
ஜோகாங் கோயில், லாசா நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இது கட்டியமைக்கப்பட்ட காலம், போத்தலா மாளிகையை ஒத்த காலத்தில் அமைகிறது. கோயிலிலுள்ள சாக்கியமுனி சிலை, இளவரசி wenchengயினால் அந்நாளைய சீன தலைநகர் chang an இலிருந்து கொண்டு வரப்பட்டது. லாசா, புனித இடம் என்று கூறப்படுவது, இந்த புத்தர் சிலையுடன் தொடர்புடையதாகும். இளவரசி wencheng-ன் காரணத்தினால், இந்தக் கோயிலின் கட்டிட பாணி , திபெத் மற்றும் ஹான் இனங்களின் சிறப்புகளை இணைத்தது. கோயிலிலுள்ள இளவரசி wencheng திபெத்தில் நுழைவது என்ற தலையிலான, சுமார் நூறு மீட்டர் நீளமான படமும், ஜோகாங் கோயில் கட்டுமானப் படமும், இங்குள்ள அரிய படைப்புகளாகும்.
ஜோகாங் கோயிலுக்கு முன் வழிபடுகின்ற மத நம்பிக்கையாளர்கள்
(சீன வானொலி நிலையம்)
பர்கோர் தெரு, லாசாவின் பழைய நகரப் பிரதேசத்தில் உள்ளது. திபெத் இன வாழ்க்கைப் பழக்கவழக்கங்கள் நிறைந்த இந்தப் பழைய தெரு, பண்டைக்கால லாசா நகரின் தோற்றங்களை போதியளவில் வெளிப்படுத்துகிறது. கைவினையால் மெருகூட்டப்பட்ட கற்களால் போடப்பட்ட இந்த தெரு, அகலமாக இல்லை என்ற போதிலும், லாசாவில் மிக அதிகமானோர் போய் வருகின்ற இடமாகவுள்ளது. இங்குள்ள கடைகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேலாகும். இறைவேண்டல் சக்கரம், திபெத் இன ஆடை, திபெத் சித்திரம் முதலிய பல்வகை பொருட்களும், இந்தியா மற்றும் நேபாளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பல்வகை வணிகப் பொருட்களும், இங்கு விற்கப்படுகின்றன.
திபெத் பாணி கட்டிடங்களும் தெருக்களும் இங்கு நிறைய காணப்படுகின்றன. திபெத்தின் பல்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள் இங்கு கூடுகின்றனர். புத்த மதம், அவர்களின் வாழ்க்கை முறையாக மாறியுள்ளது என்பதை, கையிலிருந்து பிரிக்காத இறைவேண்டல் சக்கரமும் மணிகளும் காட்டுகின்றன.
பர்கோர் தெரு(சீன வானொலி நிலையம்)
|