• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-01 16:48:02    
திபெத்திற்கு செல்ல சுற்றுலா அனுமதிச் சான்று

cri
சீனச் சட்டவிதிகளின் படி வெளிநாட்டுப் பயணிகள் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டுமென்றால் திபெத்தில் நுழையும் அனுமதிச் சான்று பெற்றிருக்க வேண்டும்.

திபெத்தில் நுழைவதற்கு அனுமதிச் சான்று பெறுவது பற்றிய வழிமுறைகள் பின்வருமாறு:

1. கடவுச்சீட்டு வைத்திருக்கின்ற வெளிநாட்டுப் பயணிகள் திபெத்தில் சுற்றுப்பயணம் செய்ய விரும்பினால் முதலில் அங்கு நுழையும் அனுமதி சான்று பெற வேண்டும்.

2. அனுமதிச் சான்று வாங்குவதற்கான வழிமுறைகள்:

அ. கடவுச்சீட்டின் முதல் பக்கம், சீனாவுக்கு வந்த போது சீனச் சுங்கத் துறையால் வழங்கப்பட்ட நுழைவு விசா பதிவு பக்கம் ஆகியவற்றின் பிரதிகளை வானஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் திபெத் சுற்றுலா விவகாரத்துக்கு பொறுப்பான சர்வதேசச் சுற்றுலா நிறுவனத்தின் கிளைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த கிளைகள் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

ஆ. விண்ணப்பம் செய்பவரின் வேலை இந்த சுற்றுப்பயண அனுமதிச் சான்று வாங்கும் போது குறிபிடப்பட வேண்டும். சீனச் சட்டவிதிகளின் படி வெளிநாட்டுச் செய்தியாளர்கள் மற்றும் தூதாண்மை அதிகாரிகள் சாதாரண சுற்றுலா பயணி என்ற அடிப்படையில் திபெத்தில் நுழையக் கூடாது. இதில் கவனம் செலுத்த வேண்டும்.

இ. திபெத் சுற்றுலா விவகாரத்திற்கு பொறுப்பான சர்வதேசச் சுற்றுலா நிறுவனத்தின் கிளைகளுக்கு விண்ணப்பம் செய்வோருக்கு திபெதில் நுழையும் அனுமதிச் சான்று வழங்கப்படுகின்றது.

ஈ. திபெத்தில் நுழையும் அனுமதிச் சான்று பெற்ற சுற்றுலா பயணிகள் அந்த அனுமதிச் சான்றை காட்டி விமானப் பயணச்சீட்டு அல்லது தொடர் வண்டி பயணச்சீட்டு வாங்கலாம். பின்னர் சுற்றுப்பயணக் குழுவுடன் இணைந்து திபெத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம்.

திபெத்தின் எல்லைப்பிரதேச இடங்களில் சுற்றுப்பயணம் செய்ய அனுமதிச் சான்று:

சுற்றுப் பயணத்தின் போது திபெத்தின் மேதோக், ஷாம், குரோமோ, திங்ரி(சோமோலங்மா சிகரம்),ஆலி ஆகிய எல்லைப் பிரதேச இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் அனைவரும் அங்கு செல்வதற்கான அனுமதிச் சான்று வாங்க வேண்டும். வெளிநாட்டுப் பயணிகள் திபெத்தில் நுழையும் அனுமதி சான்றை பயன்படுத்தி எல்லைப் பிரதேச இடங்களிலான சுற்றுலா அனுமதிச் சான்றை பெற விண்ணப்பம் செய்யலாம். இது சுற்றுலா துறையால் கையாளப்படுகிறது.