• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-01 15:11:51    
பட்டு நூற்க கற்றுக்கொடுத்த லெய்ஸு

cri
4500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹுவாங்தி எனும் மஞ்சள் பேரரசர், யான்தி எனும் சிவப்பு பேரரசர் ஆகிய இருவரது வழிதோன்றலாகவே சீனர்கள் தங்களை கருதுகின்றனர். கதையின் படி, ஹுவாங்தி எனும் மஞ்சள் பேரரசர் இளம் வயதினராய் இருந்தபோது, பொது வாழ்க்கையில், மக்களது நலனில் காட்டிய தீவிர அக்கரையின் காரணம், தனது சொந்த வாழ்க்கையை கூட பெரிதும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். மகணுக்கு இன்னும் வாழ்க்கைத் துணை அமையவில்லையே என்று கவலைப்பட்ட பெற்றோர், அவர்கள் அறிந்த பெரியோர் கொண்டு வந்த வரன்களை எல்லாம் தம் மகன் மஞ்சள் பேரரசருக்கு அறிவித்தனர். அவருக்கு இணையாக வர முற்பட்ட அனைத்து பெண்களுமே அழகில் தேவைதைகளாகத்தான் இருந்தனர். ஆனால் பேரரசரோ, தனக்கு மனைவியாக வருபவள், பார்க்க அழகியாக இருத்தல் மட்டும் போதாது, அவள் தலைசிறந்த திறன்கள் கொண்டவளாகவும் இருக்கவேண்டும் என்று கூறி எல்லா பெண்களையும் மறுத்துவிட்டார். எனவே அவரது பெற்றோரும் அவரை அவரது போக்கிலேயே விட்டுவிட்டனர்.
ஒரு நாள் மேற்கு மலைப்பகுதியில் மஞ்சள் பேரரசர் வேட்டையாடச் சென்றார். அங்கே ஓரிடத்தில் பெரிய மல்பெர்ரி மரத்தின் கீழே ஒரு பெண்ணை பார்த்தார் அவர். அந்த பெண் ஒரு காலில் முழங்காலிடு, கையை மரத்தில் வைத்தபடி வாயிலிருந்து பட்டை உமிழ்ந்து கொண்டிருந்தால் அந்தப் பெண். வயிலிருந்து வெளியே வந்த பட்டு இழை கீழே அழகாக ஒரு கூஜா வடிவில் உருட்டப்பட்டுக்கொண்டிருந்தது. தங்க நிறத்தில் ஜொலித்து பின் கீழே வெள்ளி உருண்டையாய் தகதகத்த பட்டுஇழையை பார்த்த மஞ்சள் பேரரசர், பட்டை உமிழும் ஒரு பெண்ணை பார்ப்பேன் என்று நினைத்தும் பார்க்கவில்லை. யோசாவ் மரத்தால் வீடு கட்ட கற்றுக்கொடுத்தார், ஷென்னோங் பயிர்செய்ய கற்றுக்கொடுத்தார். இன்றைக்கு மக்களுக்கு உணவுக்கும் உறைவிடத்துக்கும் கவலையில்லை ஆனால் உடைகள் தான் விலங்குகளின் தோல் கொண்டு செய்யப்பட்டு பார்க்க சகிக்கமுடியவில்லை. பட்டால் வேய்ந்த ஆடைகளை அணிந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று தனக்குள் எண்ணிய அவர் கீழே மூன்று உருண்டை பட்டை உமிழ்ந்தபின் புறப்பட எத்தனித்த அந்த பெண்ணை பார்த்து, கொஞ்சம் பொறு சகோதரியே என்றார். அந்த பெண் பணிவாக வணங்கி நின்ற அவர் பார்த்து என்ன வேண்டும் சொல் சகோதரா என்றாள். அதற்கு மஞ்சள் பேரரசர், சற்று நேரத்துக்கு முன் நீ பட்டை உமிழ்ந்துகொண்டிருந்தாயே அந்த வித்தையை எனக்கு கற்றுக்கொடுப்பாயா? என்று கேட்டார். அதற்கு அந்த பெண், ஒரே ஒரு நபருக்கு மட்டும் தான் நான் அதை கற்றுக்கொடுக்க என் தாய் அனுமதிப்பார்" என்றாள். யாருக்கு என்று அவர் கேட்க, வெட்கத்தோடு, என்னுடைய வருங்கால கணவனுக்கு என்றாள் அந்த பெண். அந்த வார்த்தைகளை கேட்ட மஞ்சள் பேரரசருக்கு வியப்பு ஆனால் அவளை உற்று நோக்கியபோது ஏமாற்றம். அவள் அழகாக இல்லை. குள்ளமாய், கறுப்பாய், தடித்த உதடு கொண்டவளாய் காட்சியளித்த அந்த பெண்ணை கண்டு அவர் என்ன செய்வது என்று யோசித்தார். பிறகு, பட்டை உமிழும் பெண்ணை மனைவியாக கொள்வது ஒருவகையில் நல்லதுதான். அவள் அழகாய் இல்லாவிட்டால் என்ன என்று முடிவு செய்து "பெண்ணே, உனக்கு சம்மதமென்றால், நான் உன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயார்" என்றார். பின் அந்த பெண் அவருக்கு அருகில் வர, இருவரும் அருகே இருந்த ஒரு பாறையில் அமர்ந்தனர். சரி நாம் திருமணம் செய்ய முடிவு செய்துவிட்டோம், இப்போது சொல், நீ யார், நீ எங்கே வசிக்கிறாய்" என்று கேட்டார். அதற்கு அந்த பெண், என் பெயர் லெய்ஸு, நான் சொர்க்கத்தின் அரசியுடைய பணிப்பெண்ணாய் இருந்தவள். அவரது கட்டளை மீறியதால், என்னை பூமிக்கு தண்டனையாக அனுப்பிவிட்டார் என்று கூறினாள். அப்படி என்ன செய்தாய்? என்று அவர் கேட்க, அவள் " ஒரு நாள் நான் என் தோழியரோடு மலர்களை கண்டு ரசிக்க பூந்தோட்டத்துக்கு சென்றேன். அங்கே ஐந்து நிற பூச்செடி ஒன்று கனிகள் நிறைந்து காணப்பட்டது. அழகாகவும், சுகந்த மணமும் கொண்ட அந்த கனிகளில் மயங்கி, நான் சிலவற்றை எடுத்து உண்டேன். இனிப்பாய் இருந்த கனிகளை உண்ட சிறிது நேரத்தில் வயிற்றில் ஏதோ செய்தது. நான் வாந்தியெடுக்க ஆரம்பித்தேன். தரையில் விழுந்து வாந்தியாக பட்டை உமிழத் தொடங்கினேன். அப்போது சில வண்ணத்துப்பூச்சிகள் திடீரென் எங்கிருந்தோ வந்து அந்த வாசனை நிறைந்த செடியை சுற்றி வட்டமிட்டன. நான் அந்த வண்ணத்துப்பூச்சிகளை அந்த செடியின் விதைகளை சாப்பிடச்செய்து பட்டை உமிழவைக்கு முடியுமா என்று யோசித்தேன். அந்த வண்ணத்துப்பூச்சிகளும் அந்த விதைகளை உண்டு சில முட்டைகளையிட்டன. முட்டைகளிலிருந்து பட்டுப்புழுக்கள் வந்தன. அந்த புழுக்களுக்கும் நான் அந்த செடியின் விதைகளை கொடுத்தபோது அவை பட்டை நூற்கத்தொடங்கின. நான் வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் துடுக்கான ஒரு பணிப்பெண் நடந்ததையெல்லாம் சொர்க்கத்தின் அரசிக்கு சொல்லிவிட்டாள். உடனே அங்கே பற்ந்தோடி வந்த அரசி என்னை சொர்க்கத்திலிருந்து விரட்டிவிட்டார். ஒரு பள்ளத்தாக்கில் வீசப்பட்ட நான் ஓநாய்களால் இரையாக்கப்பட இருந்த நேரம் விறகு சேகரிக்க வந்த ஷிலிங் ஷு எனும் மூதாட்டி என்னை காப்பாற்றி அழைத்துச் சென்றார். அவரை நான் தாயாக ஏற்றுக்கொண்டேன். அப்போது முதல் நான் அவரோடு வசித்து வருகிறேன்" என்று தன் கதை சொல்லி முடித்தாள். என்ன சொல்வதென்று தெரியாமல், ஆதரவாக அவளது தோளை தட்டிக்கொடுத்த மஞ்சல் பேரரசரிடம், " நான் இந்த மலையின் மேற்கு பகுதியில் சில பட்டுப்புழுக்களை நான் வைத்துள்ளேன், அவை இப்போது பட்டை நூற்கத்தொடங்கியுள்ளன. என்னோடு வாருங்கள் நான் காட்டுகிறேன்" என்று அவள் அவரை அழைத்துச் சென்றாள். அங்கே சென்று அவள் கூறியபடி பட்டுப்புழுக்களை பார்த்த மஞ்சள் பேரரசர், நான் புறப்படுகிறேன், பின் சில ஆட்களை அனுப்பி இந்த பட்டுப்புழுக்களின் கூட்டை எடுத்து வரச் செய்வேன் என்று கூறி விடை பெற்றுச்சென்றார். வீடு திரும்பிய மஞ்சள் பேரரசர், தான் தனக்கு மனைவியை கண்டுபிடித்துவிட்டதாக பெற்றோரிடம் கூறினார். பின் லெய்ஸுவை வீட்டுக்கு அவர் அழைத்துவந்தபோது நகரமே திரண்டு வரவேற்றது. சிலர் ஏன் இப்படி ஒரு அழகற்ற பெண்ணை அவர் மணமுடித்தார் என்று கேட்க வேறு சிலர், நிச்சயம் அந்தப் பெண் தனிசிறப்புடையவளாகத்தான் இருக்கவேண்டும் அதனால்தான் மஞ்சள் பேரரசர் அவளை மனைவியாக ஆக்கிக்கொண்டார் என்றனர். பின்னர் பட்டுப்புழுக்களின் கூட்டை கண்ட மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். பின்னாளில் இந்த பட்டுப்புழுக்களின் கூட்டிலிருந்து எப்படி பட்டை நீக்கவேண்டும் என்று கற்பிக்க, பல பெண்கள் அவளிடமிருந்து கற்றுக்கொண்டனர். பட்டு இழைகளின் உருண்டைகளை கண்ட மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். பின் லெய்ஸூ மக்களுக்கு பட்டுப்புழு வளர்ப்பையும், பட்டு நூற்பையும், பட்டால் துணிகளை நெய்வதையும் கற்றுக்கொடுத்தாள். லெய்ஸுவின் உதவியோடு, மக்களனைவரும் விலங்குதோக் ஆடைகளை களைந்து பட்டாலான ஆடைகளை அணியத்தொடங்கினர். காலப்போக்கில் மக்கள் தங்கள் வீடுகளில் லெய்ஸுவின் உருவத்தை தங்களது நூற்பறைகளில் பட்டுத்தாயாக, பட்டுக்கடவுளாக வைத்து வழிபடத்தொடங்கினர்.