• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-01 15:14:55    
குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி

cri
ஆசிய பாதை விளம்பரத்தின் ஓமன் பிரதிநிதிக் குழு 30ம் நாள் ஓமனின் தலைநகரான மஸ்கட் நகரில் செய்தியாளர் கூட்டம் நடத்தி, குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணிகளை விவரித்தது. ஓமன் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைமைச் செயலாளர் Ali al Sinani முதலியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஆசிய பாதை விளம்பர நடவடிக்கையின் பிரச்சார திரைப்படம் காண்பிக்கப்பட்டது. குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன. திட்டப்படி, அனைத்து திடல்களும் அரங்குகளும் கட்டியமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட வேண்டிய திட்டப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

குவாங் சோ இளம் தொண்டர் அணி சங்கத்தின் நிர்வாகபணியாளர் உறுதிமொழி கூறி பதவி ஏற்கும் விழா 29ம் நாள் குவாங் சோ நகரின் Zhong Shan பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. குவாங் சோ இளம் தொண்டர் அணி சங்கம் வெளிப்படையாக தேர்ந்தெடுத்த 100க்கு அதிகமான தொண்டர்கள் பதவி ஏற்பு விழாவின் போது, உறுதிமொழி எடுத்தனர். அவர்கள் தலைமையிலான 6 இலட்சத்து 90 ஆயிரம் தொண்டர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொண்டாற்றுவார்கள்.

16வது ஆசிய விளையாட்டுப் போட்டி 2010ம் ஆண்டு நவம்பர் 12 முதல், 27ம் நாள் வரை, சீனாவின் தென் பகுதியிலுள்ள குவாங் சோ நகரில் நடைபெறும். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 42 போட்டிகள் உள்ளன. அதன் பின், 10வது உடல் சவாலுற்றோர் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.
சீன அரசு அவையின் அனுமதியுடன், 2004ம் ஆண்டு மார்ச் 31ம் நாள், ஆசிய ஒலிம்பிக் செயல் குழுவிடம் ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பத்தை குவாங் சோ அதிகாரப்பூர்வமாக ஒப்படைந்தது. தவிர, தென் கொரியாவின் சியோல், மலேசியாவின் கோலாலம்பூரில், ஜோர்டானின் அம்மான் ஆகியவை 2010ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவதை விண்ணப்பித்துவதாக அறிவித்தன.