• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-02 15:05:26    
அழகான நூசியாங் ஆற்றுபள்ளத்தாக்கு

cri

நூசியாங் ஆறு, சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள மிக பெரிய ஆறாகும். சீனாவின் சிறுப்பாண்மை தேசிய இனங்கள் குழுமி வாழும் யுன்னான் மாநிலம், இவ்வாற்றின் கரையில் அமைந்துள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், நூசியாங்கின் பள்ளத்தாக்கிலுள்ள அழகான இயற்கை காட்சி இடங்களையும் தனிச்சிறப்பான தேசிய இன பாணிகளையும் உணர்ந்து கொள்ள வாருங்கள். அறிவிப்பாளர் கலைமகள்.

நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, லீ சூ இனத்தவர்கள் பாடிய மது அருந்தும் போது பாடப்படும் வாழ்த்து பாடலொலியாகும். அவர்கள், யுன்னான் மாநிலத்தின் வடமேற்கு பகுதியிலுள்ள நூ சியாங் பிரதேசத்தில் வாழ்கின்றனர். லீ சூ இனத்தைத் தவிர, நூ, தூலுங், ஹன், பூமி, யீ, திபெத், தேய் முதலிய இனங்களைச் சேர்ந்தவர்கள் இப்பிரதேசத்தில் வாழ்கின்றனர்.
நூசியாங் பிரதேசத்தின் மொத்த பரப்பளவு, 14 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். ஒடுக்குப்புறப் பிரதேசத்தில் அமைந்ததால், அங்குள்ள இயற்கை காட்சி இடங்கள் மிகவும் தூய்மையானவை. உள்ளூர் மக்களில் ஒருவரான சென் ஜியுன் அறிமுகப்படுத்தியதாவது:
எங்கள் ஊர், மிகவும் அழகானது. மக்கள் நல்லெண்ணத்துடன் விருந்தினரை வரவேற்கின்றனர். இந்த இயற்கை காட்சிகள், மனிதரால் உருவாக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
நூசியாங் பிரதேசச் சுற்றுலா பணியகத்தின் பணியாளர் சாவ் வென்சாங் கூறியதாவது:

நூசியாங் பள்ளத்தாக்கு, மானித நாகரிகம் மற்றும் இயற்கையாக அமைந்துள்ள நூல் ஆகும். வேறுபட்ட கோணங்களில் பார்த்தால் வேறுபட்ட உணர்வுகளைப் பெற முடியுமென்று அவர் குறிப்பிட்டார்.
நூசியாங் பள்ளத்தாக்கில், கல் சந்திரன் என்னும் மண்டலம், குறிப்பிடத்தக்கது. தொலைவிலிருந்து பார்த்தால், கரும்பு மலைகளில் காணப்படும் பெரிய கற்குகை ஒன்று, வானிலுள்ள சந்திரனைப் போன்று காட்சியளிக்கும்.
மொத்தம் 3200 கிலோமீட்டர் நீளமான நூசியாங் ஆறு, தாங்குலா மலையின் தெற்குப் பகுதியில் தொடங்குகிறது. சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசம், யுன்னான் மாநிலம் ஆகியவற்றைக் கடந்து, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

குளிர்காலத்தில் நூசியாங் ஆற்று நீர் பரப்பின் பெரும்பாலான பகுதிகள் அமைதியாக உள்ளன. புலி குதிப்பு என்னும் காட்சி மண்டலத்தில் மட்டும், ஆற்றின் பிரமாண்டமான கம்பீரமான காட்சி வெளிப்படுத்தப்படுகிறது.
முன்பு, மலை உயரமாகவும் நீர் விரைவாக ஒடுவதாகவும் இருந்ததால், நூசியாங் ஆற்றின் இருகரைகளில் பாலங்கள் ஏதுமி்ல்லை. இரும்பு கம்பிகள் மூலம், இரு கரைகளும் சென்றுவரலாம். இப்போது நூசியாங் ஆற்றின் இரு கரைகளிலும் தொங்குகின்ற இரும்பு பாலங்கள் அதிகமாகவுள்ளன. விரைவாக ஓடும் இந்த ஆற்றைக் கடந்து செல்வதும் சுற்றுலா பயணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. துணிவுடைய பயணிகள், உள்ளூர் மக்களின் உதவியுடன் இந்தத் தொங்கு பாலங்கள் வழியாக நடந்து சென்று இன்புறலாம்