• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-03 09:11:56    
ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த குவாங் சோ விண்ணப்பித்த விதம்

cri
16வது ஆசிய விளையாட்டுப் போட்டி 2010ம் ஆண்டு நவம்பர் 12 முதல், 27ம் நாள் வரை, சீனாவின் தென் பகுதியிலுள்ள குவாங் சோ நகரில் நடைபெறும். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 42 போட்டிகள் உள்ளன. அதன் பின், 10வது உடல் சவாலுற்றோர் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.
சீன அரசு அவையின் அனுமதியுடன், 2004ம் ஆண்டு மார்ச் 31ம் நாள், ஆசிய ஒலிம்பிக் செயல் குழுவிடம் ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பத்தை குவாங் சோ அதிகாரப்பூர்வமாக ஒப்படைந்தது. தவிர, தென் கொரியாவின் சியோல், மலேசியாவின் கோலாலம்பூரில், ஜோர்டானின் அம்மான் ஆகியவை 2010ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவதை விண்ணப்பித்துவதாக அறிவித்தன.

பல்வேறு கோட்பாடுகளால், சியோல் மற்றும் அம்மான் முறையே 2004ம் ஆண்டு மார்ச் 24ம் நாளும் 31ம் நாளும் தானாகவே விலகின. இதைத் தொடர்ந்து, கோலாலம்பூரும் இப்போட்டி நடத்துவதாக விண்ணப்பித்ததை விலக்கியது. அதனால், 2010ம் ஆண்டு 16வது ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த விண்ணப்பித்த ஒரே ஒரு நகரமாக குவாங் சோ மாறியது.
2004ம் ஆண்டு ஜூலை முதல் நாளிரவு, ஆசிய ஒலிம்பிக் செயல் குழுவின் 23வது முழு அமர்வில் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்திய உரிமையை குவாங் சோ பெறுவதாக இக்குழுவின் தலைவர் Fahad அறிவித்தார். இதனையடுத்து, இந்த நகரம் மகிழ்ச்சி கடலில் மூழ்கியது.
இது வரை, பல குவாங் சோ நகரவாசிகள் பலர் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துகின்ற உரிமையை குவாங் சோ வெற்றிகரமாக விண்ணப்பித்து பெற்றதில்.

குவாங் சோ நகரவாசி Liang Dong அதிகப் பெருமை அடைந்தார். 2010ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துகின்ற உரிமையை இந்நகரம் வெற்றிகரமாக பெற்றிருப்பது என்பது, இதர நகரங்களுடன் ஒப்பிடும்போது, குவாங் சோ தனிச்சிறப்பு வாய்ந்த மேம்பாடுகளை கொள்வதை முழுமையாக வெளிப்படுத்தியது. ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு விண்ணப்பித்தப் பணிகளில் பங்கெடுத்த குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழுவின் துணை தலைமைச் செயலாளர் Gu Shiyang எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்தபோது, இவ்வாறு கூறினார்.
சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி செயல்படுத்தப்பட்ட பின், குவாங் சோவின் பொருளாதாரம் உயர்வேக வளர்ச்சியைப் பெற்றது. இது சீனாவின் பொருளாதார ஆற்றலில் 3வது இடம்பெற்றது. தவிர, 6வது மற்றும் 9வது சீன தேசிய விளையாட்டுப் போட்டியை குவாங் சோ வெற்றிகரமாக நடத்தியது. மாபெரும் பன்நோக்க விளையாட்டுப் போட்டியை நடத்திய திடல்களையும் அரங்குகளையும் இது பெற்றுள்ளது. சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகப் பொருட்களின் இரண்டு பொருட்காட்சிகளை குவாங் சோ நடத்தியது. தங்கும் விடுதி உள்ளிட்ட தொடர்புடைய தொழிற்துறைகளின் வளர்ச்சியை முன்னேற்றியுள்ளது. குவாங் சோ ஒப்பிட்டளவில் பூரணமான துறைமுகத்தையும், முழுமையான நகர அடிப்படை வசதிகளையும் கொள்கின்றது. அத்துடன், அதன் நகர சுற்றுச்சூழல் தொடர்ந்து முழுமைப்படுத்தப்பட்டது. ஆசிய பிரதேசத்தில் குவாங் சோ குறிப்பிட்ட தகுநிலையையும் செல்வாக்கையையும் வாய்ந்தாக வளர்ந்து வருகின்றது என்று அவர் கூறினார்.

ஆசியா உள்பட உலகிற்கு குவாங் சோவை 2010ம் ஆண்டு நடைபெறும் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி எடுத்துக்காட்டும். ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமை வெற்றிகரமாக பெற்ற பின், பொருளாதார வளர்ச்சி, நகர ஆக்கப்பணி ஆகிய துறைகளில் குவாங் சோ ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று Gu Shiyang கூறினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையை வெற்றிகரமாக பெற்றபின், மாபெரும் ஆற்றல்களை ஒருங்கிணைத்த குவாங் சோ, 2010ம் ஆணடில், திடல்கள் அரங்குகள், நகர போக்குவரத்து, நகர சுற்றுச்சூழல் உள்ளிட்ட ஒட்டுமொத்த வளர்ச்சியை வரைவு செய்ய துவங்கியது. தற்போதைய நிலைமையை பார்க்கும் போது, அனைத்து பணிகளும் சுமுகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், நாங்கள் இப்பணிகள் நடைபெறும் வேகத்தை விரைவுபடுத்தியுள்ளோம் என்று அவர் கூறினார்.