• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-03 09:11:56    
மருத்துவர் Han Xiaohong அம்மையார்

cri
Han Xiaohong அம்மையார் நடத்தும் Ci Ming உடல் சோதனை மையம், 6 ஆண்டுகளுக்குள் சீனாவில் மிகப் பெரிய உடல் சோதனை மற்றும் உடல் நிலை கட்டுப்பாட்டு நிலையமாக மாறியுள்ளது. இம்மையத்தின் நிறுவனர் மற்றும் ஆளுநராக, அவர் வெளிப்படுத்திய மனப்பாங்கு மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளது.
பொதுவான வரையறையின்படி, மருத்துவர் தகுதியையும் ஜெர்மனியின் heidelberg பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்தையும் பெற்ற Han Xiaohong, தலைசிறந்த மனிதராக மாறியுள்ளார். தொடர்ந்து மருத்துவராக வேலை செய்திருந்தால், தடையில்லாத அருமையான எதிர்காலத்தை அவர் கொண்டிருக்க முடியும். ஆனால், எதிர்காலம் எளிமையாகவும் தெளிவாகவும் பார்க்கப்படக் கூடிய பாதையில் அவர் நடைபோட விரும்பவில்லை என்பதால், மருத்துவமனையிலிருந்து வெளியேறி வணிகத் துறையில் ஈடுபட்டார். முக்கியமான தகுநிலை மாற்றம் பற்றியும், தொழில் நடத்தத் தொடங்கிய ஆரம்பத்தில் சந்தித்த இன்னல்கள் பற்றியும் குறிப்பிடுகையில், தாம் எப்போதும் பயப்படவில்லை என்று Han Xiaohong அம்மையார் கூறினார். ஏனென்றால், பட்டத்தாரி மாணவர் முதல் முனைவர் வரையான கல்விக் காலத்தில் பல அறைகூவலை சந்தித்த அவர், மன உறுதியும்ம் அமைதியும் கொண்டவராக மாறினார்.
தொழில் நிறுவனத்தை நிர்வகிக்கும் போக்கில், பெருந்தன்மையுடன் மற்றவரின் மேம்பாடுடைய திறனைத் தட்டியெழுப்ப Han Xiaohong விரும்புகிறார். அவரது மனதில் ஒவ்வொரு பணியாளரும் நல்லவரே. பெருந்தன்மையும் திறந்த மனமும் கொண்ட அவர் வெற்றி பெற்றதில் வியப்பில்லை.
2004ஆம் ஆண்டு Ci Ming உடல் சோதனை மையத்தின் 4வது கிளை நிறுவப்பட்டது. ஆனால் முதல்முறையாக இம்மையத்துக்குச் சென்று உடல் சோதனை பெற்ற அவரது தந்தை, புற்று நோயால் பீடிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. துன்பங்கள் ஒருபோதும் தனியாக வராது. துமையோடுதான் வரும். அவரது தந்தை மரணமடைவதற்கு 3 திங்களுக்கு முன், இரைப்பை புற்று நோயால் தான் பீடிக்கப்பட்டதை கண்டறிந்தார்.
தந்தை காலமாகிய பின், Han Xiaohong தனது நோய் மற்றும் மன வருத்தத்திலிருந்து விடுபட்டு, முழுமூச்சுடன் பணியில் ஈடுபட்டார். சொந்த அனுபவங்களைத் தொகுத்து, உடல் சோதனையிலிருந்து தொடங்கி உடல் நலத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற புதிய கருத்தை முன்வைத்தார்.
"உடல் நலக் கட்டுப்பாடு, கருத்தாக்கம் மட்டுமல்ல முதலீடு செய்யும் ஒரு வழிமுறையும் ஆகும். நோய் தடுப்புக்காக 1 யுவான் முதலீடு செய்தால் சிகிச்சை பெறுவதில் 99 யுவான் செலவைக் குறைக்கலாம்" என்று Han Xiaohong கூறினார்.
ஓய்வு நேரத்தை உண்மையாக அனுபவிக்கக் கூடிய போது, கட்டிகள் தொடர்பான நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றைத் துவக்க அவர் விரும்புகிறார். மேலதிக மக்கள் உடல் நலத்துடன் வாழ வழி செய்வது என்பது, பல ஆண்டுகளாக நீடித்துள்ள அவரது கனவாகும்.