ஏப்ரல் திங்களின் முற்பாதியில் சுமார் நூறு வெளிநாட்டுப் பயணக் குழுக்கள் லாசாவுக்கு வரவுள்ளன என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுலா ஆணையத்தின் தலைவர் Badro தெரிவித்தார்.
அண்மையில் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது, ஏப்ரல் 5ம் நாள் திபெத் மீண்டும் வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்கத் துவங்கியதாக அவர் கூறினார். வெளிநாட்டு நண்பர்ளுக்கு அவர் உளமார வரவேற்பு தெரிவித்தார்.
சுற்றுலாத் தொழில் திபெத்தின் முக்கிய தொழில் துறைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 2007ம் ஆண்டு மொத்தம் 40 இலட்சத்துக்கு அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் திபெத்தில் பயணம் மேற்கொண்டனர்.
|