• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-02 10:45:04    
திபெத்தியல் அறிஞர்களின் கருத்து

cri
திபெத், உலகில் மிக உயரமான இடமாகும். அதனால், அது, தூய்மையான இடமுமாகும் என்று சீனத் திபெத்தியல் ஆய்வு மையத்தின் சமூக மற்றும் பொருளாதார ஆய்வகத்தின் ஆய்வாளர் லுவொழொங்சான்துய் அண்மையில் தெரிவித்தார்.

அண்மையில் வெளியிட்ட திபெத் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிக்கையில் முக்கிய பங்களித்தவர்களில் லுவொழொங்சான்துய் ஒருவர் ஆவார். நவீன வணிகத் துறை, சுற்றுலா, பண்பாட்டுப் பொழுதுபோக்கு முதலிய சேவைத் துறைகள், திபெத்தில் முக்கிய தொழிற்துறையாக மாறியுள்ளன என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டியது.

ஆண்டுதோறும், ளட்சக்கணக்கான பயணிகள், திபெத்தில் பயணம் மேற்கொள்கின்றனர். இது திபெத் இனப் பண்பாட்டைப் பாதிக்கும் என்று சிலர் கவலை தெரிவிக்கின்றனர். உண்மையில், திபெத்தில் மக்கள் பயணம் மேற்கொள்வது, முக்கியமாக திபெத் இனப் பண்பாட்டை அனுபவிப்பதற்கேயாகும். எனவே, திபெத்தின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி, திபெத் இனப் பண்பாட்டை அச்சுறுத்துவது அல்ல, திபெத் இனப் பண்பாட்டுக்கான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதே ஆகும் என்று லுவொழொங்சான்துய் கூறினார்.

நடுவண் அரசின் பெருமளவிலான ஆதரவுடன், திபெத் விரைவான வளர்ச்சியை நிறைவேற்றும் முன்னேற்றப் போக்கில், மூல வளம் மற்றும் சுற்றுச்சூழலில் கொடுக்கும் பதில் விலை, சீனாவில் மிகச் சிறியதாகும் என்றும் அவர் கூறினார்.