
நீங்சியா ஹுவே தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான நின்சுவான், சீனாவின் வடமேற்கு பகுதியில் ஹெலான் மலையின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. தனிச்சிறப்பான சுற்றுலா மூலவளங்களால், கடந்த சில ஆண்டுகளில் யீன்சுவான், பயணிகளை ஈர்த்து வருகிறது. இன்று, நாம் அனைவரும் இணைந்து சென்று, அங்குள்ள சி சியா அரசர் கல்லறைகள், ஹெலான் மலை பாறைகளிலுள்ள ஓவியங்கள் ஆகியவற்றைப் பார்த்து, பல இரகசியங்கள் வெளிப்படாமல், புதிதாகவுள்ள சி சியா வம்சத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் உணர்ந்துகொள்வோம்.
 11ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் 13ம் நூற்றாண்டின் துவக்கம் வரையான இரண்டு நூற்றாண்டுகளில், நாடோடிகளாக மேய்ச்சல் நிலத்தை தேடும் ஆயர்களின் வாழ்வைக் கொண்ட சியாங் இனத்தின் கிளையான தாங் சியாங் இனத்தவர்கள், தற்போதைய நிங் சியா ஹுய் தன்னாட்சி பிரதேசத்தை மையமாக கொண்ட சீனாவின் வடமேற்கு பகுதியில் சி சியா வம்சத்தை நிறுவினர். அப்போதைய ஜின் மற்றும் தெற்கு சூங் வம்சங்களுடன் சேர்ந்து ஒரே காலக்கட்டத்தில் இது நிலவியது. பிறகு, மங்கோலிய இராணுவப்படையால் சி சியா வம்சம், தோற்கடிக்கப்பட்டு, சீனாவின் ஹன் இனத்திலும் இதர இனங்களிலும் படிப்படியாக கலந்துள்ளது.

|