• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-03 09:11:56    
சுவாங் இனத்தின் விழாக்கள்(ஆ)

cri

Chili விழா

Chili விழா, குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லோங் சோ மாவட்டம் மற்றும் பிங் சியாங் நகரில் வாழும் மக்களின் விழாவாகும். Chili என்றால், சுவங் மொழியில் கொண்டாட்டம் என்று பொருள். சுவாங் இன மக்கள், வசந்த விழாவைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், 1894ம் ஆண்டு வசந்த விழாவிற்கு முன், பிரான்ஸ் ஆக்கிராமிப்பாளர்கள் சீன எல்லையை ஆக்கிராமித்தனர். அவர்களை வெளியேற்றும் வகையில், சுவாங் இன இளைஞர்கள் போரில் ஈடுபட்டதால் வசந்த விழாவைக் கொண்டாடவில்லை. முதல் திங்களின் 30ம் நாள் தான், போர் வீரர்கள் வெற்றி பெற்று தாயகத்திற்குத் திரும்பினர். வசந்த விழா கொம்டாடாமல் விட்டத்தை ஈடு செய்யும் வகையில் விழா கொண்டாடினர். காலப்போக்கில் இந்த நாள் தான், Chili விழாவாக உருவாகியது. Chili விழாவின் போது, சுவாங் இன மக்கள், வசந்த விழாவைப் போல் சிங்க நடனம் செய்து ஆடி பாடி மகிழ்கின்றனர்.

நிலக்கடவுள் வழிபாடு

சீன சந்திர நாட்காட்டியின்படி 2வது திங்களின் 2ம் நாள் சுவாங் இன மக்கள் நிலத் தேவனையும் தேவியையும் வழிபடுகின்றனர். சுவாங் இனம், நீண்டகால விவசாய வரலாறு கொண்ட இனமாகும். அதனால்தான் தலைமுறை தலைமுறையாக நிலக் கடவுளை மதித்து வழிபடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் நிலக்கடவுளுக்கு கோயில் காணப்படுகிறது. இக்கடவுள், அந்த இடத்தின் சிறந்த அறுவடையையும் பாதுகாப்பையும் பேணிகாப்பவராக கருதப்படுகின்றார்.

Huawang விழா

Huawang என்றால், மலர் அரசி என்பது பொருள். சந்திர நாட்காட்டின்படி 2வது திங்களின் 2ம் அல்லது 19ம் நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இது குவங்சி ச்சுவங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ningming, longzhou முதலிய இடங்களின் பாரம்பரிய விழாவாகும்.

மலர் அரசி, சுவாங் இன மக்கள் உளமார வழிபாடு செய்கின்ற ஒரு பெண் தெய்வமாகும். அவர், மனிதகுலத்தின் பிறப்பை நிர்வாகித்து, குழ்தைகளைப் பாதுகாக்கின்ற கடவுளாக கருதப்படுகிறார். எனவே குழந்தை பிறந்தவுடன், அதன் படுக்கைக்கு அருகில் மலர் அரசியின் சிற்பனை ஒன்று வைக்கப்படுவது வழக்கம்.