• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-02 14:06:36    
அருமையான திபெத் தொடர்பான வினாவிடை

cri
கலை.........வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம்.

செல்வம்....... இந்நிகழ்ச்சி மூலம் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

கலை........ஆமாம். இன்றைய நிகழ்ச்சியில் கலையரசியுடன் வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் இணைந்து உங்களுக்கு சேவை புரிகின்றார்.

செல்வம்.......இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களுடன் இணைந்து நேயர் நண்பர்களுக்கு, துவங்கவுள்ள அருமையான திபெத் என்னும் இணையதளப் பொது அறிவுப் போட்டி பற்றி விளக்கம் செய்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

கலை.......நீண்டகாலம் கழிந்து நிகழ்ச்சி தொடர்பாக உங்களுடன் ஒத்துழைத்து முயற்சிப்பதில் நானும் மகிழ்ச்சியடைகின்றேன்.

செல்வம்.......சரி. நிகழ்ச்சி பற்றி நேயர்களுக்கு விளக்கம் அளிக்கலாமா?

கலை.........சரி செல்வம், 2009ம் ஆண்டு சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த 50வது நிறைவு ஆண்டாகும்.

செல்வம்.......ஆமாம். வானொலி அல்லது இணைய தளத்தின் மூலம் திபெத் பற்றி பல்வகை தகவல்களை கேட்டறிந்துள்ளோம். நினைவில் இன்னும் தெளிவாக இருக்கின்ற திபெத்தின் 50 ஆண்டு கால ஜனநாயகச் சீர்திருத்தம் தொடர்பான கண்காட்சியை பார்வையிட்ட பின் ஜெயா, கிளீடஸ், மைக்கில் இருவரை கண்ட பேட்டி, திபெத்தியல் ஆய்வு மையத்தின் முனைவர் ஆன் ஸாய் தானுக்கான நேர்காணல் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் திபெத்தின் முந்தைய மற்றும் இன்றைய நிலைமைகள் பற்றி தெள்ளத் தெளிவாக அறிந்து கொண்டோம்.

கலை.........உங்கள் கருத்தை கேட்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனென்றால் நேயர்கள் நிகழ்ச்சிகளை கேட்பதன் மூலம் திபெத்தை மேலும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதே அத்தகைய சிறப்பு நிகழ்ச்சிகளை உருவாக்குவதன் நோக்கமாகும்.

செல்வம்.... திபெத்திலான சுற்றுலா தகவல் பற்றி மேலும் கூடுதலாக அறிந்து கொள்ள நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

கலை........இதில் பிரச்சினை ஏதுமில்லை. உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற சீன வானொலி இவ்வாண்டு இணைய தளப் பொது அறிவுப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

செல்வம்.......இது நல்ல செய்தி. இதுவரை இணையதளத்தின் மூலமாக பொது அறிவுப் போட்டி ஏதும் நடத்தப்பட வில்லை. இது பற்றி நேயர்களுக்கு கூடுதலாக விளக்கிக் கூறுங்கள்.

கலை........2009ம் ஆண்டு திபெத்தில் ஜனநாயகச்ச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பொன் விழாவாகும்.

செல்வம்.......ஆம். இதை நம் நேயர்கள் ஏற்கனவே அறிந்து கொண்டுள்ளனர்.

கலை........இது பற்றிய பிரச்சாரத்திற்கு ஏற்ப ஏப்ரல் திங்கள் 15ம் நாள் முதல் மே திங்கள் 31ம் நாள் வரை அருமையான திபெத் என்னும் இணையதளப் பொது அறிவுப் போட்டி நடைபெறும்.

செல்வம்.......இந்தப் போட்டியில் எந்த அளவில் திபெத் பற்றி அறிமுகப்படுத்தப்படும்?

கலை........ திபெத்தில் செழுமையான சுற்றுலா, மூலவளங்கள் மற்றும் சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களின் பண்பாடு முக்கியமாக இந்த அறிவுப் போட்டியில் விவரிக்கப்படும்.

செல்வம்.......ஏப்ரல் 15ம் நாள் முதல் மே 31ம் நாள் வரையான நாட்களில் சீன வானொலி நிலையத்தைச் சேர்ந்த மொழிப் பிரிவுகள் அனைத்தும் நடப்புப் போட்டியை நடத்துகின்றனவா?

கலை........அப்படி இல்லை. இந்த முறை 8 மொழிப் பிரிவுகள் மட்டும் இப்போட்டியை நடத்துகின்றன.

செல்வம்.......அவை யாவை விபரமாக குறிப்பிடுங்கள்.

கலை........மகிழ்ச்சி. ஆங்கிலம், நேபாளம், இந்தி, தமிழ், செக், பிரென்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் ஆகிய எட்டு மொழிப் பிரிவுகள் இந்த அறிவுப் போட்டியை தங்களது நேயர்களுக்காக நடத்துகின்றன.

செல்வம்.......இந்த எட்டு மொழிப் பிரிவுகள் மட்டுமே இணையதளத்தின் மூலம் அருமையான திபெத் என்னும் பொது அறிவுப் போட்டியை நடத்துகின்றன அல்லவா?

கலை........ஆமாம். ஆகவே சீனாவிலும் வெளிநாடுகளிலும் இந்த எட்டு மொழி பேசும் இணையதளப் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தாராளமாக நடப்புப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

செல்வம்.......போட்டியின் பெயரை ஏற்கனவே குறிப்பிட்டீர்கள்.

கலை........ஆமாம். இங்கே மீண்டும் உறுதிப்படுத்துகின்றோம்.

செல்வம்.......சரி. நான் அதை சொல்லலாமா?

கலை........சொல்லுங்கள்.

செல்வம்.......அருமையான திபெத் என்பது நடப்புப் பொது அறிவுப் போட்டியின் பெயராகும்.

கலை.........அடுத்து அருமையான திபெத் என்னும் பொது அறிவுப் போட்டியின் அம்சங்கள் பற்றி தெளிவுபடுத்துகின்றோம்.

செல்வம்.......இப்போட்டியில் எத்தனை கட்டுரைகள் இருக்கின்றன?

கலை........5.

செல்வம்.....அவற்றை தனித்தனியாக குறிப்பிடுங்கள்.

கலை........முதலாவது கட்டுரையின் பெயர் அழகான புனித நகர் லாசா.

செல்வம்.....இரண்டாவது கட்டுரையின் பெயர் என்ன?

கலை........அது பீடபூமியிலுள்ள பண்டைய நகர் ஷிகாசெ.

செல்வம்.......மூன்றாவது என்ன?

கலை........திபெத்திலான தெற்கு ஊர் நிங்ச்சி.

செல்வம்.......சரி. நான்காவது கட்டுரையின் பெயர்.

கலை........உலகின் உச்சியிலிருந்து ஒலிக்கும் திபெத் இசை என்பது பற்றி நான்காவது கட்டுரையில் முக்கியமாக விளக்கப்படுகின்றது.

செல்வம்.......கடைசி கட்டுரை கண்டிப்பாக திபெத்தின் பாரம்பரிய விழா பற்றியது. அல்லவா?

கலை........புத்திசாலி. அற்புதமான பல்வகை பாரம்பரிய திபெத் விழாக்கள் என்பது 5வது கட்டுரையின் பெயராகும்.

செல்வம்.......இப்போது நாங்கள் அருமையான திபெத் என்னும் பொது அறிவுப் போட்டியின் அம்சங்கள் பற்றி நேயர் நண்பர்களுக்கு விளக்கிக் கூறியுள்ளோம். அடுத்து பொது அறிவுப் போட்டி பற்றிய ஏற்பாட்டை கூறலாமே.

கலை........ஆமாம். முதலில் ஏப்ரல் திங்கள் 10ம் நாளன்று மேற்கூறிய 8 மொழிப் பிரிவுகள் இணையதளத்தின் மூலம் நேயர்களுக்கு இந்த பொது அறிவுப் போட்டி நடத்துவது பற்றிய செய்தியை அறிவிக்கும். அதேவேளையில் போட்டியில் கலந்து கொள்வதற்கு அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

செல்வம்.......இதிலே என்ன முக்கியம் அறிந்து கொள்ள வேண்டும்? இப்போது அவற்றை நேயர்களுக்கு கொஞ்சம் விவரிக்கலாமா?

கலை........கண்டிப்பாக. இணையதளத்தில் விடை அளிக்கும் வழிமுறை, திபெத்தில் நுழையும் அனுமதிச் சான்றை கையாள்வது முதலியவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

செல்வம்......அடுத்து என்ன செய்ய வேண்டும்?

கலை........ஏப்ரல் திங்கள் 15ம் நாள் முதல் இந்த எட்டு மொழிப் பிரிவுகளின் இணையதளத்தில் அருமையான திபெத் என்னும் பொது அறிவுப் போட்டி பற்றிய சிறப்பு இணைய பக்கம் திறந்து வைக்கப்படும்.

செல்வம்.......இந்த பக்கத்தில் பொது அறிவுப் போட்டியின் அம்சங்கள் அனைத்தையும் கவனமாக படித்து விடையளிக்க வேண்டும். அப்படிதானே.

கலை........ஆமாம். அப்போது கட்டுரைகள் மற்றும் நிழற்படங்கள் ஒருங்கிணைந்த வடிவத்தில் திபெத்தின் இயற்கைக் காட்சியிடங்கள், தேசிய இனப் பண்பாடு, சமூகம், பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆகியவை எடுத்துக்காட்டப்படும்.

செல்வம்.......ஏப்ரல் 15ம் நாள் முதல் நாம் இணையதளத்தின் மூலம் அருமையான திபெத் என்னும் இணைய பக்கத்தில் நுழைந்து கட்டுரைகளை படித்து விடை அளிக்கலாம். அல்லவா?

கலை........ஆமாம். ஏப்ரல் 15ம் நாள் முதல் மே திங்கள் 31ம் நாளிரவு 12 மணிவரை நேயர் நண்பர்கள் அனைவரும் தாராளமாக இணையதளத்தின் மூலம் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

செல்வம்.......பொது அறிவுப் போட்டியின் பெயர் மற்றும் அம்சங்கள் பற்றி விளக்கி கூறினோம். அடுத்து போட்டிக்கான பரிசு பற்றி விளக்கம் செய்யலாமா?

கலை........நிச்சயமாக. எட்டு மொழிப் பிரிவுகள் சீன வானொலி பதிப்பாசிரியர் அலுவலகம் வெளியிட்ட விதிகளின் படி முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளை பெறும் நேயர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

செல்வம்.......இந்த முறை சிறப்புப் பரிசு வழங்கும் வாய்ப்பு உண்டா?

கலை.......உண்டு. முதலாவது இரண்டாம் மூன்றாம் பரிசுகளை பெற்ற நேயர்களிலிருந்து எட்டு நேயர்கள் சிறப்புப் பரிசு பெறுவோராக தேர்ந்தெடுக்கப்படுவர்.

செல்வம்........சிறப்புப் பரிசு பெறுவோருக்கு சீனாவில் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டா?

கலை....... சிறப்புப் பரிசு பெற்றவர் சீனாவில் சுற்றுலா பயணம் மேற்கொள்வது விதியாகியுள்ளது. இதில் மாற்றமேதும் இல்லை. நாங்கள் இப்போது செய்யவேண்டியது மேலும் கூடுதலான நேயர்களை அணிதிரட்டி இணையதளப் பொது அறிவுப் போட்டியில் கலந்து கொள்ள பாடுபட வேண்டும்.

செல்வம்........இதில் பிரச்சினையில்லை. நமது நேயர்களிடையில் நல்ல அடிப்படை சூழ்நிலை தொடர்கின்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழ் நேயர் மன்றத் தலைவர்களுக்கு செல்லிட பேசி வலைப்பின்னல் அமைப்பின் மூலம் பொது அறிவுப் போட்டி நடத்துவது பற்றிய செய்தியை அறிவித்தால் கண்டிப்பாக நேயர்கள் சுறுசுறுப்பாக இந்த போட்டியில் கலந்து கொள்வார்கள். இதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

கலை.......நல்ல செய்தி. முதல் இரண்டாம் மூன்றாம் மற்றும் சிறப்பு பரிசுகள் உறுதிப்படுத்தப்படுவது தவிர, போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நேயர்களுக்கும் நினைவு அட்டை அனுப்பப்படும். பரிசு சான்றிதழ்களும் பொருட்களும் அனுப்பப்படும்.

செல்வம்........சிறப்பு பரிசு பெற்ற எட்டு நேயர்கள் எப்போது சீனாவுக்கு வருவர்?

கலை.......அவர்கள் ஜுன் திங்களின் இறுதியில் இலவசமாக சீனாவுக்கு வர அழைக்கப்படுவர்.

செல்வம்........சீனாவில் சுற்றுலா பயணம் செய்யும் போது திபெத்தில் செலுத்தும் வாய்ப்பு உண்டா?

கலை.......இது பற்றி இப்போது நேயர்களுக்கு விபரமான விளக்கம் அளிக்க முடியாது. ஆனால் வாய்ப்பு இருந்தால் திபெத்தில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்ய விரும்புகின்றோம்.

செல்வம்........நல்ல செய்தி. நாம் அந்த நல்ல செய்தியை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.

கலை.......சரி செல்வம் இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி முடிவடையும் நேரம் ஆகிவிட்டது.

செல்வம்........நிகழ்ச்சி மூலம் உங்களுடன் சேர்ந்து நேயர்களுக்கு அருமையான திபெத் என்னும் இணையதள பொது அறிவுப் போட்டி பற்றி விபரமாக விளக்கிக் கூறியதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

கலை.......ஆமாம். இந்த நிகழ்ச்சி அடுத்த வாரம் சனிக்கிழமையில் இடம் பெறும் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் மீண்டும் ஒலிபரப்பபடும்.

செல்வம்........நல்லது. பல நேயர்கள் இரண்டு முறை இந்த தகவலை கேட்டறியலாம். நாம் செல்லிட பேசி வலைப்பின்னல் வழி முறை மூலம் இந்த கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியை கேட்க முன்னதாக நேயர்களுக்கு வேண்டுகோள் விடுப்போம்.

கலை.......பொது அறிவுப் போட்டிக்காக நேயர்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு மிக்க நன்றி.

செல்வம்........உங்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை வழங்க வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி.

கலை.......இத்துடன் இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.

செல்வம்........அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.

கலை.......வணக்கம் நேயர்களே.