• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-03 09:18:25    
திபெத் புத்தாண்டு

cri
திபெத் புத்தாண்டு திபெத் இனத்தின் கோலாகலமான விழாவாகும். திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் வேறுபட்ட காலங்களில் திபெத் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. திபெத் நாட்காட்டியின் படி ஜனவரி முதல் நாள், லாசாவில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. திபெத் நாட்காட்டியின் படி டிசம்பர் முதல் நாள், நாங்ச்சு ஆற்றின் தென் பகுதியிலுள்ள மக்கள் புத்தாண்டை கொண்டாடுகிறனர். திபெத் நாட்காட்டியின் படி நவம்பர் முதல் நாள் சம்தோவின் சில பிரதேசங்கள் புத்தாண்டை கொண்டாடுகிறன.

ஷின்செ நடனம் (சீன வானொலி நிலையம்)

திபெத் நாட்காட்டியின் படி டிசம்பர் திங்கள் முதல் புத்தாண்டை வரவேற்க லாசா மக்கள் ஆயத்தம் செய்கின்றனர். அனைத்து குடும்பங்களும் ச்செமார் உணவை தயாரிக்கின்றன. வண்ண அலங்கர வடிவமைப்பு கொண்ட மரப் பெட்டியின் இரு மருங்கிலும் கோதுமை விதைகள் மற்றும் வெண்ணெய் தேனீர் கலந்த சாம்பா உணவு வைக்கப்படுகின்றன. பார்லி மற்றும் வெண்ணெயால் தயாரிக்கப்பட்ட வண்ண பூ மாதிரிகள் இந்த உணவின் மேல் வைக்கப்படுகின்றன. பார்லி விதைகள் நீரில் போடப்படுகின்றது. புத்தாண்டில் இவை முளைவிடும். ச்செமார் மற்றும் கோதுமையை தேவனுக்கு படைப்பது புத்தாண்டில் அமோக அறுவடை பெற இறை வேண்டல் செய்வதை குறிக்கின்றது.

புத்தாண்டின் முந்தைய நாள் அனைத்து வீடுகளிலும் புத்த சிலைக்கு முன்பாக பல்வகை உணவுப் பொருட்கள் படைக்கப்படுகின்றன. விழாவின் போது, அதிக உணவுப் பொருட்களை தயாரித்து படைக்கும் வகையில், நள்ளிரவு வரை குடும்பத்தினர் அனைவரும் பணிபுரிகின்றனர்.

திபெத் நாட்காட்டியின் படி ஜனவரி முதல் நாளின் விடியற்காலை கதைப்பாடல் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளோடு திபெத் புத்தாண்டு வரவேற்கப்படுகின்றது. கதைப்பாடல் கலைஞர்கள் வெண்ணிற முகமூடியோடு மரக் குச்சியை பிடித்தபடி முனதில் தோன்றுவதை பாடலாக பாடுகின்றனர். திபெத்தின மக்கள் தன்னிகரற்ற கதைப்பாடல் கலையால் அமைதி மற்றும் மங்களத்தை வெளிப்படுத்துகின்றனர். அனைத்து குடும்பங்களும் வீட்டிலிருந்து ஒருவரை ஆற்றங்கரைக்கு அனுப்பி, புத்தாண்டில் எடுக்கப்படும் முதல் வாளி நீரை கொண்டு வர செய்கின்றனர். அந்த நீரில் தேனீர் போட்டுக் குடிப்பது இந்த நாளின் முக்கிய நிகழ்ச்சியாகும்.

புத்தாண்டின் இரண்டாவது நாள் முதல், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வணக்கத்தையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கக் துவங்குகிறார்கள். அடுத்த 3 அல்லது 5 நாட்கள் இந்நடவடிக்கை தொடர்கிறது.

திபெத் புத்தாண்டின் போது, சதுக்கங்கள் மற்றும் புல் தரையில் பொது மக்கள் வட்டவடிவத்தில் கூடி கோர்ச்சோம் நடனத்தையும் ஷின்செ நடனத்தையும் ஆடி மகிழ்கின்றனர். பல்வகை இசைக்கருவிகளின் இசையோடு மக்கள் அனைவரும் கைகோர்த்து நிலத்தில் காலால் தாளமிட்ட வண்ணம் பாடுகின்றனர். குழந்தைகள் பட்டாசுகள் கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். மகிழ்ச்சியான சூழ்லில் மக்கள் அனைவரும் மூழ்கிக் காணப்படுகின்றனர்.

திபெத் புத்தாண்டை முன்னிட்டு, ச்செமார்கள் மலர்கள் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்ட போத்தலா மாளிகை (சிங்குவா செய்தி நிறுவனம் )

திபெத் நாட்காட்டியின் முதல் திங்களான ஜனவரி 15வது நாள் வரை, திபெத் புத்தாண்டு கொண்டாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.