ஷிகாசெ பிரதேசம், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது. இங்குள்ள ஷிகாசெ நகர், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இது, கடல் மட்டத்திலிருந்து 3800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
ஷிகாசெயின் காட்சி (சீன வானொலி நிலையம்)
ஷிகாசெ நகரிலுள்ள பழங்காலக் கட்டிடங்கள், திபெத் கட்டிடப் பாணி மட்டுமல்ல, ஹான் இனத்தின் கட்டிட வேலைப்பாட்டையும் கொண்டவையாகும். திபெத்தில் இரண்டாவது இடம் வகிக்கும் மத முதல்வரான பஞ்சென் லாமா தங்கியிருக்கும் இடமான தாஷில்ஹூன்போ துறவியர் மடம், ஷிகாசெவின் சின்னமாகும். இத்துறவியர் மடம், மலை அடிவாரத்தில் கட்டியமைக்கப்பட்டது. கம்பீரமாக தோற்றமளிக்கும் இந்த மடம், லாசா நகரிலுள்ள போத்தலா மாளிகையைப் போன்று அழகான கட்டிடமாகும். தற்போது, 11வது பஞ்சென் லாமாவுக்கு, 19 வயதாகிறது. ஷிகாசெ பிரதேசத்தைச் சேர்ந்த கியாங்செ மாவட்டத்தில், ஒரு புகழ்பெற்ற மடம் இருக்கிறது. அது, பல்கோர் துறவியர் மடம் என அழைக்கப்படுகிறது. இதில் அதிகமான புத்தக் கோபுரங்கள் இடம்பெறுகின்றன. இந்த மடம், திபெத் கோபுரப் பேரரசர் எனவும் அழைக்கப்படுகிறது. இத்துறவியர் மடத்தில் அதிகமான சுவர் ஓவியங்கள் இருக்கின்றன. மேலும், இந்தச் சுவர் ஓவியங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவையாகும். ஒவ்வொரு பகுதியும், சொந்த பாணியுடையவை. ஆனால், அவற்றுக்கு இடையில், நெருக்கமான உறவு நிலவுகிறது.
தாஷில்ஹூன்போ துறவியர் மடம் (சீன வானொலி நிலையம்)
பல்கோர் துறவியர் மடம் (சீன வானொலி நிலையம்)
ஷிகாசெவுக்குத் தெற்குப் பிரதேசத்தில், அழகான பனிக்கட்டி அதாவது உலகின் உச்சியாக சோமோலங்மா சிகரம் இருக்கிறது. அது, உலகில் மிக உயரமான சிகரமாகும். திபெத் மொழியில், சோமோலங்மா என்றால் நிலத்தின் தாய். இந்த மலைச் சிகரத்தின் 20 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில், அதிகமான சிகரங்களும் மலைத் தொடர்களும் காணப்படலாம். இக்காட்சி, கம்பீரமாக இருக்கிறது. 2008ம் ஆண்டு மே 8ம் நாள், சோமோலங்மா சிகரத்தில் ஒலிம்பிக் புனிதத் தீபத் தொடரோட்டத்தில் ஈடுபட்ட சீன மலையேற்ற அணியினர், ஒலிம்பிக் தீபத்தை, 8300 மீட்டர் உயரமுள்ள முகாமிலிருந்து, சிகரத்தின் உச்சிக்கு ஏந்திச் சென்றனர். இது, மனிதகுலத்தின் ஒலிம்பிக் வரலாற்றில் அற்புதமான ஒரு நிகழ்வாகும்.
சோமோலங்மா சிகரம் (Gettyimages)
|