• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-07 10:27:10    
இன்னொரு இனிப்பான சீன உணவு வகை

cri
க்ளீட்டஸ் – இன்று வாணி, க்ளீட்டஸ் இருவரும் உங்களுக்கு இன்னொரு சுவையான சீன உணவு வகை பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
வாணி – இன்று இனிப்பான உணவு வகை பற்றி கூறுகின்றோம். பால், மக்காச்சோள மாவு, கோதுமை மாவு, முட்டை முதலியவற்றால் தயாரிக்கப்பட்ட இந்த உணவு வகையை நான் கூட அடிக்கடி வீட்டில் தயாரிக்கின்றேன்.
க்ளீட்டஸ் – அப்படியா? அதன் சீனப் பெயர் என்ன?
வாணி – அதன் சீனப் பெயர் fa gao. gao என்பது கேக் தான். ஆனால், சீன மொழியில் அதே உச்சரிப்புக்கு உயர்வு என்ற பொருளும் உண்டு. ஆகையால், வசந்த விழாவில் பல இல்லத்தரசிகள் இதைத் தயாரிக்க விரும்புகின்றனர். குடும்பத்தினர்கள் இதை உட்கொண்டு, புத்தாண்டில் கல்வி அல்லது இலட்சியத்தில் மேலும் வெற்றி பெற வேண்டும் என்பது அதன் பொருளாகும்.
க்ளீட்டஸ் -- fa gao என்ற உணவு வகையின் பின்னணியில் நல்ல கருத்துள்ள எண்ணம் உள்ளது. நல்லது. வசந்த காலம் நெருங்கும் வேளையில் இந்த இனிப்பு வகையை தயாரிப்பது பற்றி கூறுவதில் மகிழ்ச்சி. அதன் தயாரிப்பு முறை கடினமானதா?
வாணி – மிகவும் எளிதானது. தேவைப்படும் பொருட்கள் எல்லாம் தமிழகத்தில் கிடைக்கலாம்.
க்ளீட்டஸ் – அப்படி என்றால், முதலில், தேவைப்படும் பொருட்கள் பற்றி அறிமுகப்படுத்துங்கள்.
வாணி – சரி.
கோதுமை மாவு 100 கிராம்
மக்காச்சோள மாவு 150 கிராம்
முட்டை 1
பால் போதிய அளவு
சோடா மாவு ஒரு தேக்கரண்டி
சர்க்கரை மூன்று தேக்கரண்டி அல்லது விரும்பபடி
வாணி – முதலில் பாலை கொஞ்சம் சூடுபடுத்துங்கள். அதன் வெப்பம் 40 கிதிரி செல்சியஸ் அளவில் இருப்பதாக கட்டுபடுத்துங்கள். பிறகு, சோடா மாவை இதில் கொட்டி நன்றாக கலந்திருக்க வேண்டும்.

க்ளீட்டஸ் – வாணி, எவ்வளவு சோடா மாவு தேவை?
வாணி – 100 கிராம் கோதுமை மாவுக்கு ஒரு தேக்கரண்டி அளவிலான சோடா மாவு போதும். மேலும், பாலைக் கூடுதலாக வேகவிடக் கூடாது. இல்லை என்றால், சோடா மாவுவின் பயன் கிடைக்காமல் போகலாம்.
க்ளீட்டஸ் – மக்காச் சோள மாவையும் கோதுமை மாவையும் கலக்கவும். முட்டையை உடைத்து பாத்திரத்தில் கொட்டி, சர்க்கரையுடன் சேர்ந்து நன்றாக கிளற வேண்டும்.

வாணி – மாவு கலப்பு, முட்டை, சோடா மாவு கலந்த பால் ஆகியவற்றை ஒரே பாத்திரத்தில் கலந்து, நன்றாக பிசையுங்கள். பிறகு, சிறிது நேரம் அப்படியே இருக்கவிடுங்கள்.
க்ளீட்டஸ் – அப்படியே 2 மணி நேரம் இருந்தால், மாவு கலப்பு 2 மடங்காக பொங்களிக்கும்.
வாணி – நன்றாக பொங்கிய பின், ஆவியில் வேக வைக்கலாம். அதன் மேலே விரும்பும் காய்ந்த பழங்களை போடலாம். நான் அடிக்கடி சீனப் பேரீச்சம் பழத்தை பயன்படுத்துகின்றேன். சுவையானது

க்ளீட்டஸ் – 15 நிமிடங்களுக்குப் பின், இன்றைய fa gao தயார்.
வாணி – இன்று தயாரிக்கப்பட்ட உணவு வகை, இனிப்பானது. இதைச் சீன கேக் என்று அழைக்கலாம்.
க்ளீட்டஸ் – மக்காச்சோள சுவை விரும்பும் நேயர்கள், இதில் கொஞ்சம் அதிகமான மக்காச்சோள மாவை சேர்க்கலாம். ஆனால், கோதுமை மாவின் சுவை மேலும் மேன்மையானது.
வாணி – எப்படி, நேயர்களே, வீட்டில் fa gao, தயாரித்து ருசிப்பார்ப்பீர்களா? புதிய ஆண்டில், உங்கள் கல்வி மற்றும் வேலை இலட்சியம் மேலும் பெரும் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.