திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு, 7ம் நாள், லாசா நகருக்கு தோட்ட நகரம் என்ற பெருமையை சூட்டியது. இரண்டு ஆண்டுகால கட்டுமானத்தின் மூலம், லாசா நகர், திபெத்தில் முதலாவது தோட்ட நகரமாக மாறியுள்ளது.
2007ம் ஆண்டு முதல், சீன உயிரின வாழ்க்கைச் சூழல் தோட்டப் பணி லாசா நகரில் செயல்படுத்தப்படத் துவங்கியது. இரண்டு ஆண்டுகளில், 90 கோடி யுவான் இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது வரை, லாசாவில் காடு வளர்ப்பு பரவல் நிலப்பரப்பும், நபர் வாரி பொது புல் தரையின் நிலப்பரப்பும், 2007ம் ஆண்டில் இருந்ததை விட, பெரிதும் அதிகரித்துள்ளன.
|