• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-08 14:55:48    
F1 கார் பந்தயம்

cri
உள்ளூர் நேரப்படி 5ம் நாள் நடைபெற்ற 2009ம் ஆண்டு உலக F1 கார் பந்தயத்தின் மாலேசிய போட்டி, திடீர் புயல் மழையால், நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. இப்போட்டி நிறுத்தப்பட்ட போதைய தரவரிசைப்படி, புரான் GP அணியின் வீரர் பதுன், சாம்பியன் பட்டம் பெற்றார். BMW அணியின் வீரர் ஹேத்பில்த், தோயோத அணியின் வீரர் கலோக் 2வது மற்றும் 3வது இடங்களை வகித்தனர்.

2009ம் ஆண்டு சீன தேசிய நீச்சல் சாம்பியன் பட்டப்போட்டி, சீனாவின் கிழக்குப்பகுதியிலுள்ள சாவ் சிங் நகரில் நடைபெறுகின்றது. 6ம் நாள் நடைபெற்ற 4 இறுதிப்போட்டிகளில், சியாவ் லியு யியாங், மகளிர் 100 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சல் போட்டியிலும் சாவ் ஜியா வேய், ஆடவர் 50 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சல் போட்டியிலும் ஆசிய சாதனை படைந்தனர். ஆடவர் 100 மீட்டர் தவளைப்பாணி நீச்சலின் இறுதிப்போட்டியில் சாங் கோ யிங், புதிய தேசிய சாதனையை உருவாக்கினார். ஜீ ஹுய், மகளிர் 200 மீட்டர் கலப்பு பாணி நீச்சல் போட்டியின் தங்கப்பதக்கத்தை பெற்றார்.

இச்சாம்பியன் பட்டப்போட்டி, 12ம் நாள் முடிவடையும். இப்போட்டியில் 38 தங்கப்பதக்கங்களுக்கு போட்டிகள் நடத்தப்படும். சீனாவின் புகழ்பெற்ற வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சல் வீரர் ஊ போங்கை தவிர, சீனாவின் அனைத்து புகழ்பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் இப்போட்டியில் கலந்துகொள்கின்றனர்.
சீன மேசைப்பந்து அணி, முதல் உலக சாம்பியன் பட்டம் பெற்ற 50வது ஆண்டுநிறைவு விழா, 5ம் நாள் ருங் கோ துன்னின் சொந்த ஊரான சு ஹய் நகரில் நடைபெற்றது. உலக சாம்பியன் பட்டங்களை பெற்ற அனைத்து சீன வீரர்களும் ஒன்றுகூடி மகிழ்ந்து, சீனாவின் முதல் உலக சாம்பியன் பட்டம் பெற்ற ருங் கோ துன்னை நினைவு கூர்ந்தனர்.

1959ம் ஆண்டு ஏப்ரல் 5ம் நாள், ருங் கோ துன், ஜெர்மனியின் தோர்த்முன்த் நகரில் நடைபெற்ற 25வது உலக மேசைப்பந்து சாம்பியன் பட்டப்போட்டியில் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று, சீனாவிலிருந்து முதல் உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் என்ற புகழை பெற்றார்.
இவ்வாண்டு சீன ஆடவர் தொழிற்முறை கூடைப்பந்து தொடர்போட்டியில் 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. அரை இறுதிப்போட்டியில், கடந்த ஆண்டின் சாம்பியனான குவாங் துங் அணி, துங் குவன் அணியுடன் விளையாடும். ச்சியாங் சு அணி, சின் ஜியாங் அணியுடன் மோதும்.