• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-10 11:07:46    
சீன ஸ்னூகர் சாம்பியன் பட்டப்போட்டி

cri
முன்னாள் உலக சாம்பியன் பட்டம் பெற்றோரும், பிரிட்டன் வீரருமான ஏப்துன், 5ம் நாள், பெய்ஜிங்கில் நடைபெற்ற 2009ம் ஆண்டு சீன ஸ்னூகர் சாம்பியன் பட்டப்போட்டியின் இறுதிப்போட்டியில் 10-8 என்ற ஆட்டக்கணக்கில் ஸ்கோத்லாந்தின் புகழ் பெற்ற வீரர் ஹிக்கின்ஸை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் பெற்றார்.

இப்போட்டி முடிவடைந்ததோடு, புதிய தரவரிசை 6ம் நாள் வெளியிடப்பட்டது. சீன வீரர் திங் ஜுன் ஹுய்யின் பட்டியல், தரம் தாழ்ந்து, 15வது இடத்தில் உள்ளார். பிரிட்டனின் புகழ்பெற்ற வீரர் ஓ சுலிவன் முதலிடம் வகிக்கின்றார்.
2009ம் ஆண்டு உலக மகளிர் பனி ஹாக்கி சாம்பியன் பட்டப்போட்டி 6ம் நாள் பின்லாந்தில் தொடர்ந்து நடைபெறுகின்றது. சீன அணி, 1-6 என்ற கோல்கணக்கில், பாரம்பரிய பலமிக்க அணியான ஸ்வீடனிடம் தோல்வியடைந்தது. குழுப்போட்டிகளில் 2 தோல்விகளை சீனா பெற்றுள்ளது.

2009ம் ஆண்டு உலக ஆடவர் curling stone சாம்பியன் பட்டப்போட்டி 6ம் நாள் கனடாவில் தொடர்ந்து நடைபெறுகின்றது. சீன அணி, 2-10 மற்றும் 0-4 என்ற புள்ளிக்கணக்கில், முறையே ஜப்பான் மற்றும் கனடா அணிகளிடம் தோல்வியடைந்தது. கடந்த 3 போட்டிகளில் சீனா வெற்றி பெறவில்லை.
உலக மகளிர் தொழிற்முறை டென்னிஸ் சம்மேளனம், 6ம் நாள் புதிய தரவரிசைபட்டியலை வெளியிட்டது. 3 சீன வீராங்கனைகள், முதல் 50வது இடங்களில் இடம் பெற்றுள்ளனர். சேன் ச்சியே, லி நா, போங் சுயை, முறையே 17 29 36 ஆகிய இடங்களில் உள்ளனர். அமெரிக்க புகழ்பெற்ற வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் முதலிடம் வகிக்கிறார்.

சீன மேசைப்பந்து அணி, முதல் உலக சாம்பியன் பட்டம் பெற்ற 50வது ஆண்டுநிறைவு விழா, 5ம் நாள் ருங் கோ துன்னின் சொந்த ஊரான சு ஹய் நகரில் நடைபெற்றது. உலக சாம்பியன் பட்டங்களை பெற்ற அனைத்து சீன வீரர்களும் ஒன்றுகூடி மகிழ்ந்து, சீனாவின் முதல் உலக சாம்பியன் பட்டம் பெற்ற ருங் கோ துன்னை நினைவு கூர்ந்தனர்.
1959ம் ஆண்டு ஏப்ரல் 5ம் நாள், ருங் கோ துன், ஜெர்மனியின் தோர்த்முன்த் நகரில் நடைபெற்ற 25வது உலக மேசைப்பந்து சாம்பியன் பட்டப்போட்டியில் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று, சீனாவிலிருந்து முதல் உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் என்ற புகழை பெற்றார்.