யுன்னானிலுள்ள நூசியாங் பள்ளத்தாக்கு
cri
நூசியாங்கின் மேற்பகுதியில், ஆற்று நீர் போக்கு வேகமாக மாறுகிறது. வடக்கின் சியுநாதுங் பள்ளத்தாக்கிலிருந்து பிங்சூங்ரோ கிராமத்தை கடந்து, தாலா கிராமத்துக்குச் செல்கிறது. இங்கு நூசியாங், அரை வட்டமான வளைகூடா போன்ற அமைப்பை உருவாக்குகிறது. கோடை மற்றும் இலையுதிர் காலங்களில் நூசியாங் ஆற்று நீர் வேகம், அதிகரிக்கிறது. குளிர் மற்றும் வசந்தகாலங்களில் நீல வண்ணத்தில் ஆற்று நீர் சலசலப்பின்றி அமைதியாக உள்ளது. காட்சி மண்டலத்தின் பணியாளர் லீ வென்லின் கூறியதாவது: இந்த வளைகுடாவிலுள்ள சிறிய தீவு இயற்கையாக உருவாக்கப்பட்டது. காலையில், மேகங்கள் நிறைந்து காணப்படுகிறது. கிராமங்களையும், வீடுகளையும் தெளிவாக பார்க்க முடியாது என்று அவர் கூறினார்.  பீங்சூங்ரோ கிராமத்தின் வடப்பகுதியில், கெளலிகுங் மலையும் பிரோ பனி மலையும் நெருங்கி இணைந்து நிற்கின்றன. சுமார் 500 மீட்டர் உயரமான 200 மீட்டர் அகலமான மாபெரும் குகையை, இவை உருவாக்கியுள்ளன. இக்குகையை, நயிச்சியாங் என்று உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். அதற்கு, கடவுள் கடினமாக கடந்த நுழைவாயில் என்று பொருள். திரு லீ வான்லின் கூறியதாவது: இந்த மாபெரும் குகை, திபெத்தில் நுழைகின்ற முக்கிய பாதையாகும் என்று அவர் அறிமுகப்படுத்தினார். நூசியாங் பிரதேசத்தில் இயற்கை காட்சிகள் மிக அதிகமானம், மனிதரும் கடவுளும் இணைந்து வாழ்கின்ற இடமாக அழைக்கப்படுகிறது. பனி மலையின் கீழ், பச்சை மற்றும் மஞ்சள் வண்ணமான பயிர்கள் நிறைந்து காணப்படுகின்றன. இயற்பான அமைதியை அனுப்பவிப்பதற்காக, சுற்றுலா பயணிகள் பலர் இங்கு குறுகியமாக தங்குகின்றனர்.
 குவாங்துங் மாநிலத்தின் பயணி ஒருவர் பத்து ஆண்டுகளுக்கு முன், பீங்சூங்ரொ கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உள்ளூர் அம்மா ஒருவர் அவரை நன்றாக வரவேற்றார். பிறகு, இணையதளத்தில் உள்ளூர் மக்களின் பேரூக்கத்தையும் அன்பையும் இந்த பயணி, பாராட்டி எழுதியிருந்தார். தப்போது, மலேசியா, ஜப்பான், ஜெர்மனி, தென்கொரியா, பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்ஸ்சார்லாந்து உள்ளிட்ட பத்துக்கு மேலான நாடுகளின் விருந்தினர்கள், பீங்சூங்ரொ கிராமத்தில் தங்கி வருகின்றனர். உள்ளூர் சிறுப்பான்மை தேசிய இன மக்கள் மது கொண்டுவந்து, வாழ்த்து பாடல் பாடி, விருந்தினர்களுக்கு வரவேற்பு தெரிவிக்கின்றனர்.
 வழிக்காட்டி பயணிகளுக்கு விளக்கிக்கூறியதாவது: நீங்கள் நூசியாங் வருவதை வரவேற்கின்றோம். பாட்டு பாடி, ஆட்டம் ஆடி, மீண்டும் நூசியாங் வாருங்கள் என்பதே, அவர்கள் பாடிய பாடலின் பொருள் ஆகும். அன்புள்ள நேயர்கள், மேற்கூறிய காட்சி மண்டலங்களைத் தவிர, நூசியாங் பள்ளத்தாக்கு பிரதேசத்தில் கடல்மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரான சுமார் 20 மலைகள் உள்ளன. அவற்றில் தனிச்சிறப்பான மரங்கள், செடிகள் மற்றும் வேறுபட்ட இயற்கை காட்சிகளைக் கண்டு மகிழலாம்.
|
|