• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-10 20:54:36    
ச்சுவங் இனத்தின் விழாக்கள் (அ)

cri
சந்திர நாட்காட்டியின்படி மூன்றாவது திங்களின் 3ம் நாள், ச்சுவங் இனத்தின் பாடல் விழாவாகும்.

சுவங் இன மக்கள், ஆண்டுக்கு பல முறை பாடல் விழாக்களை நடத்துகின்றனர். ஆனால் மார்ச் 3ம் நாளில் நடைபெற்ற விழா மிகவும் பிராமண்டமானது.

மக்கள் வண்ணமான சோறுகளை சமைக்கின்றனர். 2, 3 நாட்களாக பாடல் நடவடிக்கைகள் நீடிக்கின்றன. மூங்கில் மற்றும் துணிகளால் தொழுவத்தைக் கட்டியமைக்கின்றனர். பிற கிராமங்களிலிருந்து வந்த பாடகர்களை அங்கு வரவேற்கின்றனர். திருமணம் செய்யாத இளைஞர்கள் பாடல் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

தியன் யாங் மாவட்டத்தின் பாடல் போட்டி மிக பெரியானது. இளைய ஆண்களும் பெண்களும் பாடல் மூலம் காதலர்களைத் தேடுகின்றனர். விரும்புகின்றவரை கண்டறிந்தால், ஒரு அலகரிக்கப்பட்ட பந்து ஒன்று அவருக்கு வழங்குகின்றனர். இந்தப் பந்தை ஏறிவது, போழுதுப்போக்கு மட்டுமல்ல, காதலை உறுதிப்படுத்துகின்ற சின்னமுமாகும்.

பாடல் விழா, வர்த்தக வாய்ப்பாகும். தவிர, இது தேசிய இனப் பாண்பாட்டை வெளிக்கொண்ருகின்ற கூட்டமாகும். 1985ம் ஆண்டு, மார்ச் 3ம் நாள், குவங் சி ச்சுவங் இனத் தன்னாட்சியின் தேசிய கலை விழாவாக வகுக்கப்பட்டது.

சிங் மிங் நாள்

இது மூதாத்தையரை வழிப்படுகின்ற நாளாகும். ஏப்ரல் 4ம் நாளுக்கு அருகில் 15 நாட்களில் வழிபாடு செய்ய முடியும்.

லுங் துவங் விழா

இது யுன்னான் மாநிலத்தின் ச்சுவங் இன மக்களின் பாரம்பரிய விழாவாகும். மிக மமட்டமான இடங்களில் கூடுவது இதன் பொருளாகும். சந்திர நாட்காட்டியின்படி, 3ம் திங்களின் 25ம் நாள் முதல் 3 நாட்களாக கொண்டாடப்படுகிறது. நாயகரான கிராமம், பன்றி மற்றும் மாடுகளைக் கொல்கின்றது. இளைய பெண்கள், மலர்களுடைய புதிய அணியை அணிந்து அழகாக காணப்படுகின்றனர். ஆண்கள், பெண்களுடன் ஆடி பாடி மகிழ்கின்றனர். முழு நாளிலே அவர்கள் கொண்டாடுகின்றனர்.