• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-13 10:26:55    
அமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்து வீரர் மைக்கிள் ஜோர்டன்

cri
அமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்து வீரர் மைக்கிள் ஜோர்டன், உச்சமாக கருதப்படும் கூடைப்பந்து விளையாட்டின் புகழ் மிக்க பிரமுகர்களின் நினைவரஸ்கில் 6ம் நாள் பெயர் பதிக்க பெற்றார்.
5 முறை நடைபெற்ற தொடர்ப்போட்டியின் முக்கிய மதிப்புமிக்க வீரராக மாறிய ஜோர்டன், NBA வரலாற்றில் மிக பெரிய வீரராக கருதப்பட்டார். அவர் கூடைப்பந்து போட்டிகளில் கலந்துகொண்ட 15 ஆண்டு காலத்தில், 32 ஆயிரத்து 292 புள்ளிகளை பெற்றார். இச்சாதனை, NBA வரலாற்றில் 3வது இடம் வகிக்கிறது. போட்டித்தோறும், அவர் சராசரியாக 30.12 புள்ளிகளை பெற்றுள்ளது. இது, NBA வரலாற்றில் முதலிடம் வகித்தது.

பெய்ஜிங் நேரப்படி 6ம் நாள் நடைபெற்ற NBA கூடைப்பந்து தொடர்போட்டியில், சீனாவின் வீரர் யாவ் மிங் விளையாடுகின்ற HOUSTON ROCKETS அணி, 102-88 என்ற புள்ளிக்கணக்கில், PORTLAND TRAIL BLAZERS அணியை தோற்கடித்தது. யாவ் மிங் 21 புள்ளிகளையும் 12 ரெபொன்களையும் பெற்றார்.

இதர சீன வீரர் யி ச்சியன் லியன் விளையாடுகின்ற NEW JERSEY NETS அணி, 96-67 என்ற புள்ளிக்கணக்கில் PHILADELPHIA 76ERS அணியை தோற்கடித்தது. யி ச்சியன் லியன் இப்போட்டியில் கலந்துகொள்ளவில்லை.
7ம் நாள், NBA வாரியம் புதிய தரவரிசைபட்டியலை வெளியிட்டது. அதில் LOS ANGELES LAKERS அணி, முதலிடத்தை வகிக்கிறது. ORLANDO MAGIC அணி, 2வது இடம் பெறுகிறது. கடந்த சில போட்டிகளில், தோல்வியடைந்ததால், CLEVELAND CAVALIERS, 3வது இடம் வகிக்கிறது.

சீன மேசைப்பந்து அணி, முதல் உலக சாம்பியன் பட்டம் பெற்ற 50வது ஆண்டுநிறைவு விழா, 5ம் நாள் ருங் கோ துன்னின் சொந்த ஊரான சு ஹய் நகரில் நடைபெற்றது. உலக சாம்பியன் பட்டங்களை பெற்ற அனைத்து சீன வீரர்களும் ஒன்றுகூடி மகிழ்ந்து, சீனாவின் முதல் உலக சாம்பியன் பட்டம் பெற்ற ருங் கோ துன்னை நினைவு கூர்ந்தனர்.
1959ம் ஆண்டு ஏப்ரல் 5ம் நாள், ருங் கோ துன், ஜெர்மனியின் தோர்த்முன்த் நகரில் நடைபெற்ற 25வது உலக மேசைப்பந்து சாம்பியன் பட்டப்போட்டியில் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று, சீனாவிலிருந்து முதல் உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் என்ற புகழை பெற்றார்.