• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-13 19:10:30    
திபெத் பாரம்பரிய பண்பாட்டின் செழிப்பு

cri

தற்போது, திபெத் பாரம்பரிய பண்பாட்டுத் துறையில், முன்னென்றும் கண்டிராத செழிப்பான நிலைமை காணப்படுகின்றது. இப்பண்பாட்டை பாதுகாத்து, கையேற்றி, வெளிக்கொணரும் வகையில் சீன அரசு மேற்கொண்ட கொள்கைகளும் நடவடிக்கைகளும் இதற்கு காரணமாகும் என்று, சீன திபெத்தியல் அறிஞர் தேசின் செபா 13ம் நாள் பெய்சிங்கில் தெரிவித்தார்.

திபெத் மொழியை கற்று, பயன்படுத்தி, வளர்க்கும் விதிகளை, திபெத் தன்னாட்சி பிரதேச அரசு சிறப்பாக வகுத்தது. திபெத்தின் பல்வகை பள்ளிகளில் திபெத் மொழி பற்றிய சிறப்புப்பாடம் உருவாக்கப்பட்டுள்ளன. தவிர, செய்தியேடு, இதழ், தொலைக்காட்சி உள்ளிட்ட துறைகளில், திபெத் மொழி பரந்தளவில் பயன்பாட்டுக்கு வருகிறது என்று தெசின் செபா குறிப்பிட்டார்.

திபெத்தின் பழைய நூல்களை தொகுத்துப் பதிப்பித்து,பாதுகாக்கும் வகையில், சீன அரசு அதிகமாக நிதி ஒதுக்கியது என்று, தேசின் செபா தெரிவித்தார். தற்போது, 10ஆயிரத்துக்கு அதிகமான திபெத் பாரம்பரிய மருந்துகளின் மருத்துவச் சிகிச்சை வழிமுறைகளைக் கொண்ட சீனத் திபெத் பாரம்பரிய மருந்துகள் எனும் நூல், அரசின் ஆதரவில் இயற்றப்படுகின்றது.