• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-14 16:24:09    
பண்டைய "ஹெது ஆல" நகரம் (அ)

cri

பண்டைய "ஹெது ஆல" நகரம், சீனாவின் லியாவ்நிங் மாநிலத்தின் ஃபூஷுவுன் நகரின் மன் இனத் தன்னாட்சி மாவட்டத்தில் உள்ளது. இந்நகரம், உலகப் பண்பாட்டு மரபுச் செல்வமான சிங் வம்சகால யோங்லிங் கல்லறைக்கு அருகில் இருக்கிறது. அதன் சுற்றுப்புறங்களில், ஷென்யாங், தியேலிங், சிலின், தோங்ஹுவா முதலிய பெரிய மற்றும் நடுத்தர நகரங்கள் உள்ளன. இங்கு பயணம் மேற்கொள்ள, வசதியான போக்குவரத்து உள்ளது. அங்குள்ள காட்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் தூய்மையாகவும் அழகாகவும் இருக்கின்றன.

   

லியாவ்லிங் மாநிலத்தின் முக்கியத் தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவான இந்த நகரம், தலைசிறந்த சுற்றுலா இடமாக இருக்கிறது. தவிர, சுமார் 400 ஆண்டுகள் வரலாறு கொண்ட பண்டைய நகரமாகவும் இது விளங்குகிறது. கி.பி 1616ம் ஆண்டு, பேரரசர் Nuerhachi, இங்கு ஆட்சி புரியத் துவங்கி, சின் வம்சகாலத்தை நிறுவினார். அக்காலம் தொடக்கம், "ஹெது ஆல" நகரம், சிங் வம்சக்காலத்தின் முதல் தலைநகராக ஆகியது. பின்னர், சிங் வம்சக்காலத்தின் பேரரசர் ஹுவாங்தைஜி, இங்கு சீன வரலாற்றில் கடைசி வம்சமான சிங் வம்சத்தை நிறுவினார்.