• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-15 15:19:29    
ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் குவாங் சோ மாநகரம்

cri
2008ம் ஆண்டு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, 2010ம் ஆண்டு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஆகியவற்றை அடுத்து, 2010ம் ஆண்டு குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி, சீனாவில் நடைபெறும் முக்கிய சர்வதேச நிகழ்ச்சியாகும். குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பல்வேறு ஆயத்தப் பணிகளும் சுறுசுறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2010ம் ஆண்டில், உலக மக்களுக்கு தலைசிறந்த ஆசிய விளையாட்டுப் போட்டியை குவாங் சோ வழங்கும். குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழுவின் துணை தலைமைச் செயலாளர் Gu Shiyang எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்தபோது, இவ்வாறு கூறினார்.

2010ம் ஆண்டு குவாங் சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு சீன அரசு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகின்றது. 2005ம் ஆண்டு ஜூலை 23ம் நாள், சீனத் தேசிய விளையாட்டு ஆணையத்தின் தலைவர் Liu Peng தலைவராகவும், குவாங் தூங் மாநிலத்தின் தலைவர் Huang Huahua செயல் தலைவர்களாகவும் அமையும் இப்போட்டிக்கான ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது. தற்போது, 16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழு, சீனத் தேசிய விளையாட்டு ஆணையம் மற்றும் ஆசியாவின் பல்வேறு தனித்தனி அமைப்புகளுக்கிடையிலான செயல்பாடுகளை முழுமையாக ஒன்றிணைந்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் திடல்கள் மற்றும் அரங்குகளின் ஆக்கப்பணி, விளையாட்டு ஏற்பாடுகள் ஆகிய பல்வேறு துறை பணிகளுக்கான ஆயத்தப் பணிகள் சுமூகமாக நடைபெறுகின்றன.
மிக தலைசிறந்த ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவதில் நம்பிக்கை கொள்வதாக. குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழுவின் துணை தலைமைச் செயலாளர் Gu Shiyang கூறினார்.
முதல் தர திடல்களும் அரங்குகளும், உருவாகி வருகின்றன. இதுபோல முதல் தர ஏற்பாடுகள், சேவைகள், சுற்றுச்சூழல் ஆகியவை மூலம், வரலாற்றில் கண்டிராத அளவுக்கு மிக பெரிய, மிக தலைசிறந்த ஆசிய விளையாட்டுப் போட்டியை நாங்கள் நடத்துவோம் என்று அவர் கூறினார்.

குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் திடல்களும் அரங்குகளை கட்டவும், புதுப்பிக்கவும் பணிகள் சுமூகமாக நடைபெற்று வருகின்றன. 2007ம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் அதிகாரப்பூர்வமாக கட்டப்பட துவங்கிய குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி கிராமத்தின் ஆக்கப்பணிகள் விரைவில் முடிவடையும். தற்போது, இந்த கட்டிடப்பணிகள் மிக விரைவாக நடைபெறுகின்றன என்று Gu Shiyang கூறினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி கிராமம் இப்போட்டியின் மிகப்பெரிய கட்டிடப்பணியாகும். இதுவரை இதன் கட்டுமான பணிகள், சுமூகமாக நடைபெறுகின்றன. இது திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே நிறைவேறும் என்று அவர் கூறினார்.