• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-16 11:02:25    
வூஹான் நகரில் பூத்துக்குலுங்கும் செர்ரி மலர்கள்

cri
சீனாவின் நடுப்பகுதியிலுள்ள வூஹான் நகரில் பூத்துக்குலுங்கும் செர்ரி மலர்களைப் பார்த்து ரசிப்பது, மார்ச் மற்றும் ஏப்ரல் திங்களில் நகரவாசிகளும் மாணவர்களும் மேற்கொள்ளும் சிறப்பு நடவடிக்கையாக மாறியுள்ளது. வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலான இந்த செர்ரி மலர்கள் பூத்துக்குலுங்கும் காட்சி, வசந்தகாலத்தில் மிகவும் அழகான காட்சியாக இருக்கிறது.

ஆண்டுதோறும் மார்ச் திங்களில், சீனாவில் மிக அழகான பல்கலைக்கழகமாக அழைக்கப்பட்ட வூஹான் பல்கலைக்கழகத்தில் 1000க்கு மேலான செர்ரி மரங்கள் பூத்துக்குலுங்குகின்றன. வெள்ளை நிற மலர்கள், பனியையும் மேகத்தையும் போல காட்சியளிக்க, அமைதியான பல்கலைக்கழகத்தின் தோட்டம், சுறுசுறுப்பான வசந்தப்பூங்காவாக மாறுகிறது. தோட்டத்தில் எங்கெங்கும் செர்ரி மலர்களும், பூக்களை ரசிக்கும் மக்களும், நிறைந்திருப்பதைக் காணலாம். செர்ரி மலர்கள் பூத்துக்குலுங்கும் வீதியின் அருகே, மாணவர் விடுதி அமைந்துள்ளது. இக்கட்டிடத்தின் மேடை, செர்ரி மலர் காட்சியைப் பார்த்து ரசிக்க நல்ல இடமாகும். ஆன்ஹுய் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் சென்சிங் மற்றும் வாங்பிங், படப்பதிவுக் கருவியால் இந்த அழகான காட்சியைப் பதிவு செய்தனர். சக மாணவர்களுடன் இந்த அழகான காட்சியை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

வூஹான் பல்கலைக்கழகத்தின் வசந்தகால செர்ரி மலர்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. இக்காட்சி, வூஹான்னின் வரலாற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஒட்டுமொத்தத்தன்மை வாய்ந்த பல்கலைக்கழகமான வூஹான் பல்கலைக்கழகத்தில், மானுடவியல் உணர்வு நிறைந்து காணப்படுகிறது. இந்தப் பண்பாட்டுச் சூழ்நிலையில் வசந்தத்தில் பூத்துக்குலுங்கும் செர்சி மலர்களைப் பார்த்து ரசிப்பது, மேலும் சிறப்பான உணர்வை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறினர்.

வூஹான் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற வசந்தகால செர்ரி மலர் வீதி, பொறியியல் கழகம் மற்றும் பழைய நூலகத்தின் அருகில் அமைந்துள்ளது. இவ்விரு கட்டிடங்கள் நாட்டு நிலை முக்கிய தொல்பொருள் பாதுகாப்புக் கட்டிடங்களாக இருக்கின்றன. அழகான செர்ரி மலர்கள் பூத்துக்குலுங்கும் மரத்தினடியே நின்று, பண்டைய பாணியுடைய தோட்டத்தில் நடந்து, நூல்களைப் படித்து, இனிமையான இசையைக் கேட்டு, பள்ளியில் கற்றுக்கொள்ளும் காலத்தை நினைவு கூறலாம்.
வூஹான் பல்கலைக்கழகத்தின் செர்ரி மர வளர்ப்பு. 1939ம் ஆண்டில் துவங்கியது. இந்த மரங்களை நட்டு நிர்வகிப்பது, விதை வளர்ப்பு ஆகியவற்றை,

இப்பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை பணியாளர்களின் பாரம்பரிய ஆய்வு உள்ளடக்கமாக மாற்றியுள்ளனர். செர்ரி மலர்கள் பூக்கும் காலத்தை செயற்கையாக நீட்டிக்கும் பணியில் குறிப்பிடத்தக்க சாதனை பெற்றுள்ளனர். இதுவரை, இங்கு சுமார் 1000க்கு மேலான செர்ரி மரங்கள் உள்ளன. தோட்டத்தை மேலும் அழகாக்கும் வகையில், வூஹான் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கான வாரியங்கள் தொடர்ந்து வலிமையான தொழில் நுட்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு, புதிய வகை செர்ரி மரங்களை வளர்க்க பாடுபடுகின்றன.