 
சி சியாவின் பண்டைகால பண்பாட்டின் ஆய்வில் ஈடுபடுகின்ற சி சியா ஆய்வகத்தின் தலைவர் தூ சியான் லூ பேசுகையில், பல இரகசியங்கள் வெளிப்படாமல் மர்மமான சி சியா பேரரசர் கல்லறைகள், ஹெலான் மலையின் அடிவாரத்திலுள்ள பண்பாட்டு முத்துக்கள் ஆகும். சீன நடுப்பகுதியிலிருந்து வேறுபட்ட சி சியா தொல்பொருட்கள், ஈர்ப்பு ஆற்றல் மிக்கவை. சுற்றுலா பயணிகள், சி சியா பண்பாட்டை முழுமையாக அறிந்துகொள்ளும் சுற்றுலா இடமாக, இது உள்ளது.
  சி சியா அரசர் கல்லறைகள், யீன்சுவானின் மேற்கு புறநகரத்திலுள்ள ஹெலான் மலையின் கிழக்கில் அமைந்துள்ளன. அதன் பரப்பளவு சுமார் 50 சதுர கிலோமீட்டராகும். மொத்தம் 9 பேரரசர் கல்லறைகளும், அரசர்களோடு இணைத்து புதைக்கப்பட்ட 100க்கு மேலான கல்லறைகளும், இங்கு உள்ளன. பொதுவாக கூறின், இந்தக் கல்லறைகளில், தமது இனத்தின் தனிச்சிறப்பியல்பு மட்டுமல்ல, ஹன் இனத்தின் சில பழக்கவழக்கங்களும் உள்ளன.
 
|