• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-17 21:55:32    
சுவாங் இனத்தின் விழாக்கள் 4

cri

ஏப்ரல் திங்களின் விழாக்கள்

மாட்டு ஆர்மா விழா

இது மாட்டு மன்னர் விழாவும் கூறப்படுகிறது. சந்திர நாட்காட்டியின் படி 4ம் திங்களின் 8ம் நாளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மாட்டு மன்னரின் பிறந்த நாளாகும் என்று கூறப்படுகிறது. முன்பு மாடு ஒரு கடவுளாகும். உலகிற்கு சென்று புல்களை சாப்பிட்டு முயற்சியுடன் நிலத்தை உழுக்கின்றது. மக்கள் மாடுக்கு நன்றி தெரிவிக்க, அதன் பிறந்த நாளை விழாவாக கொள்கின்றனர். இந்த விழாவில், மாடுகள் உழைக்காமல் ஒய்வு செய்கின்றன. விழாவின் போது ச்சுவங் இன மக்கள், மாடுகளைத் துப்புரப்படுத்தி மாட்டு வீடுகளை புதுப்பிக்கின்றனர்.

வசந்த கால சாகுபடி விழா

இது, நெல் நாற்று நடும் விழாவாகும். குவாங் சி ச்சுவங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தென் பகுதியிலான பாரம்பரிய விழா இதுவாகும். ஒவ்வொரு ஏப்ரல் திங்களின் 4வது அல்லது 8வது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பேய்களை வெளியேற்ற பின்பு தான், நெல் நாற்று நடத் துவங்குகின்றனர்.

சேறு தெளிப்பு விழா

சி லின், நாப்போ, சிங் சி ஆகிய மாவட்டங்களில் சுவங் இன மக்கள் சேறு தெளிப்பு விழாவைக் கொண்டாடுகின்றனர். இளைய பெண்கள், வள நிலத்திலான சேறுகளை ஆண்கள் மீது தெளிக்கின்றனர். இதன் மூலம் பாடுபட்டு வேளாண்துறையை செய்ய ஆண்களை அறிவுரைக்கின்றனர்.

தியோ குங் விழா

யுன்னான் மாநிலத்தின் பூ நிங், குவாங் சி ச்சுவங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நாப்போ முதலிய இடங்களில் சந்திர நாட்காட்டியின்படி 4ம் திங்களில் இந்த விழாவைக் கொண்டாடுவது வழக்கம். இக்கொண்டாட்டம் 3 நாட்களாக நீடிக்கும்.

முதலி நாள், கிராமங்களின் தலைவர்கள் பழங்கால ஆடைகளை அணிந்து, மிக முத்தியவரை அழைத்து முரசை வழிபாடு செய்கின்றனர். முத்தியவர் முரசை 3 முறைகள் அடித்து விழாவின் துவக்கத்தை அறிவிக்கிறார். பின்பு மக்கள் பாடி ஆடி கொண்டாடுகின்றனர்.

இத்தகைய பிரமண்டமான நடவடிக்கைகள் 2 நாட்கள் நீடிக்கிறது. கடைசி நாளில் அங்குள்ள சுவங் இன மக்கள் மூதாதையரை வழிபடுகின்றனர்.

இப்போது, இந்த விழா, போழுத்துப்போக்கு மற்றும் வர்த்தகம் செய்கின்ற பெரிய கூட்டமாக மாறியுள்ளது.