• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-17 10:52:30    
பணி புரிந்தபடியே கற்றுக் கொண்டு வரும் Zhou Jing

cri
Zhou Jing அம்மையார் தனது பணி புரிந்தபடியே கல்வி பயின்று வருகிறார். 14 ஆண்டுகளுக்கு முன் Starbucks நிறுவனம் சீனாவில் நுழைந்து, பெய்ஜிங் San Yuan நிறுவனத்துடன் இணைந்து முதலீடு செய்து, coffee கொட்டை விற்பனை அலுவலை நடத்த முயன்றது. San Yuan நிறுவனத்தில் பணிபுரிந்த Zhou Jing இரண்டு ஆண்டுகால ஆங்கில பயிற்சி பெற்றார். அதனால் அவ்வலுவலில் ஈடுபட அவர் அனுப்பப்பட்டார். முதலில் அமெரிக்காவுக்குச் சென்று அவர் பயிற்சி பெற்றது. Seattle நகரில் அமைந்துள்ள Starbucks நிறுவனத்தின் தலைமையகத்தில், coffee பண்பாடு மற்றும் Starbucks நிறுவனத்தின் புதிய அலுவல் சிந்தனை மீதான அவரது ஆர்வம் தட்டி எழுப்பப்பட்டது. "இந்தத் துறையில் ஈடுபட மேலதிகம் கற்க வேண்டும். தொடர்பான கல்வியைச் செல்வனே கற்றுக் கொள்ள வேண்டும் என அப்போது நான் கருதினேன்" என்று அவர் கூறினார். நாடு திரும்பிய பின், நட்சத்திர நிலை ஹோட்டலுக்கு coffee கொட்டை மற்றும் coffee தயாரிப்பு இயந்திரத்தை விற்பது, தனது நிறுவனத்தின் பணியாளருக்கு coffee பற்றிய அறிவுகளை கற்றுக் கொடுப்பது ஆகியவை Zhou Jingகின் முக்கிய கடமையானது. பகலில் மற்றவரின் ஆசிரியராக அவர் விளங்கினார். இரவில் அவர் வீட்டில் நூல்களைப் படித்து புதிய அறிவுகளைக் கற்றுக் கொண்டார். 1999ஆம் ஆண்டு Starbucks நிறுவனம் coffee கொட்டை விற்பனை அலுவலை முடித்துக் கொண்டு, காபியக அலுவலில் ஈடுபடத் துவங்கியது.

விற்பனைத் துறையில் நல்ல பயன் பெற்ற Zhou Jing தனது தொழிலின் தகுநிலையை மீண்டும் கருத்தில் கொண்டு, பதவி மாற்றத்தினால் ஏற்பட்ட ஏமாற்றத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. "எனது உணர்வு அப்போது அவ்வளவு நன்றாக இல்லை. முன்பு மேலாளர் பதவியிலிருந்த நான், முற்றிலும் புதிதாக தொடக்க நிலையிலிருந்து வேலை செய்ய வேண்டியிருந்தது" என்று அவர் குறிப்பிட்டார். ஆனால், புதிய வேலை புதிய சவாலாகவும் புதிய வாய்ப்பாகவும் இருக்கிறது எனவும், இளம் வயதில் இருக்கும் போது பலவற்றைக் கற்றுக் கொள்வது நல்லது எனவும் அவர் தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டார். "இழப்பு ஏற்பட்டது. ஆனால் என்ன பெறப்பட்டது எனவும், இழப்பை விட கிடைத்த பொருள் பெரியதாக இருக்கிறதா எனவும் யோசிக்க வேண்டும்" என்றார் Zhou Jing. Starbucks நிறுவனம் பற்றி ஓரளவில் அறிந்து கொண்டதால், அவர் பயிற்சிப் பிரிவில் சேர்ந்தார். அப்பிரிவு மேலாளரின் பணிக்குத் துணைபுரிந்த அவர் பயிற்சி பற்றிய தரவுகளின் மொழிபெயர்ப்புக்குப் பொறுப்பேற்றார். கல்வி பயில்வதை தனது மூலதனத்தை அதிகரிக்கும் நல்லவொரு வாய்ப்பாக Zhou Jing எப்போதும் கருதுகின்றார். "விற்பனை வேலையில் ஈடுபட்ட போது நன்றாக கல்வி பயிலவில்லை என்றால், நிறுவனத்தின் அலுவலிலான மாற்றப் போக்கில் நிறுவனத்திலிருந்து விலக நேரிடும். சொந்த திறனை அதிகரிக்கும் எனது மனநிலை அவசரமானது. எந்த வேலை எனது ஆற்றலை அதிகரிக்க துணைபுரிந்தாலும் அந்த வேலையில் ஈடுபடுவேன்." என்று உறுதியுடன் கூறினார் Zhou Jing.