• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-20 11:18:30    
தொட்டால்…வாங்கு

cri
கடைகளில் பொருட்கள் வாங்க சென்றால் குறைந்த செலவில் நன்றாக உழைக்கக்கூடிய நாம் விரும்பிய தரமான பொருட்களை தான் தேர்ந்தெடுக்கின்றோம். கடைகளில் பணிபுரிவோரும் சலித்து கொள்ளாமல் பலவித மாதிரிகளை கொண்டு வந்து நம்மிடம் காட்டி தேர்ந்தெடுக்க சொல்லுகிறார்கள். இத்தகைய நடைமுறை தற்போது எல்லோரும் கடைபிடிக்கின்ற ஒன்றாக வழக்கமாகிவிட்டது. இப்படி பொருட்களை தேர்ந்தெடுக்கும்போது, பலவேளை நாம் திட்டமிட்டதை விட அதிக தொகையிலோ அல்லது திட்டமிடாத பொருட்களையோ வாங்கியிருப்போம். எந்தவித திட்மிடுதலும் இல்லாமல், பார்த்ததும் பிடித்தோ அல்லது 50 விழுக்காடு தள்ளுபடி என்ற குறிப்பை படித்தோ கூட பொருட்கள் வாங்கியிருப்போம். ஆனால் அந்த நேரத்தில் நம்மில் ஏற்படும் மாற்றங்களை நாம் அதிகமாக உணர்வதில்லை. இவ்வாறு பொருட்களை பார்த்து, தொட்டு, உணர்ந்து கொள்ளும்போது என்ன தான் மாற்றம் ஏற்பட்டுவிடுகிறது என்பது பற்றிய ஆராய்ச்சி பல வியத்தகு தகவல்களை வழங்கியுள்ளது.

இது எங்க ஏரியா உள்ளே வராதே என்பது நமக்கே உரித்தான உரிமையை, இது என்னுடையது என்ற உடைமையை காட்டுகிறது. அதுபோல கடையிலுள்ள ஒரு பொருளை பார்த்து, விரல்களால் தொட்டு உணர்ந்து கொள்ளும்போது அப்பொருள் நம்முடையது என்ற உணர்வு ஏற்படுகிறது. அதனால் சில வேளைகளில் அதிக விலை கொடுத்து வாங்கவும் துணிந்து விடுகின்றோம் என்று புதிய ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன. இதற்கு முந்தைய ஆய்வுகளில் எல்லாம் மக்கள் வாங்குவதற்கு முன்பே அது அவர்களுடையது என்று உணர்வு ஏற்படுவதாக தெரிவித்திருக்கின்றன. ஆனால் இந்த புதிய ஆய்வில் பொருட்களை தொட்டவுடனே இது எனது, எனக்கு சொந்தமானது என்ற ஆழமான உணர்வு ஏற்படுவதாக குறிப்பிடுகின்றது. அதாவது ஒரு பொருளை பார்த்து அதன் நிறைகுறைகளை அறிந்து பொருளாதார நிலைகளை ஆராயும் வரையான நீண்டநேரத்திற்கு பின் தான் இப்பொருள் என்னுடையது என்ற உணர்வு முன்பு தோன்றியது. ஆனால் இப்போதோ பொருளை தொட்டவுடன் இது நம்முடையது தான் என்ற உணர்வு ஏற்படுகிறதாம். 30 வினாடிகளிலே இத்தகைய உணர்வு ஆழமான ஏற்பட்டு விடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதற்கான ஆய்வை அமெரிக்காவின் ஒகாயோ மாநில பல்கலைக்கழகம் நடத்தியது. தீர்வு மற்றும் முடிவெடுக்கும் திறன் என்ற இதழில் அதன் முடிவுகள் வெளியாயின. இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் விலைகுறைந்த தேனீர் குவளையை 10 முதல் 30 வினாடிகள் வரை கைகளில் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர். பிறகு, பிறர் விலை தெரிவிப்பது தெரியாத மறைமுக ஏலத்திலும், வெளிப்படையான ஏலத்திலும் பங்குகொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஏலத்திற்கு முன்னர் அப்பொருட்களின் உண்மையான விலையும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு 10 முதல் 30 வினாடிகள் வரை கையில் வைத்து பார்த்து ஆய்ந்தபோது அந்த தேனீர் குவளைகள் தங்களுக்கு சொந்தமானது என அவர்கள் வளர்த்து கொண்ட உணர்வுகள் ஏலத்தின் போது தெளிவாக வெளிப்பட்டது. அதாவது அதிக நேரம் கையில் வைத்திருந்த குவளையை அதிக விலை கொடுத்து வாங்க அவர்கள் தயாராக இருந்தது தெரியவந்தது. 30 வினாடிகள் பொருட்களை வைத்திருந்தவர்கள் 7 ஏலங்களில் 4 முறை அப்பொருளின் விலையைவிட அதிகமான விலை கொடுத்து வாங்கியிருந்தனர்.

தேனீர் குவளையை கைகளில் வாங்கி தொட்டு உணர்கின்றபோது, அது தன்னுடையது என்ற எண்ணத்தை வளர்த்து, விலை அதிகமாக இருந்தாலும் வாங்கி, எப்போதும் தங்களுடனே வைத்துக்கொள்ள மக்கள் விரும்புவதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அதிக முக்கியத்துவம் இல்லாத தேனீர் குவளையை போன்ற ஒரு பொருளை மிக விரைவாக தங்களுடையதாக எண்ணிக்கொள்வது இந்த ஆய்வில் பெறப்பட்ட வியப்பூட்டும் செய்தியாகும் என்று இவ்வாய்வின் தலைவர் ஜேம்ஸ் உல்ஃப் தெரிவிக்கிறார். பாருங்கள் வாங்குங்கள் என்ற உத்தியை விற்பனையாளர்கள் பல்வேறு விதங்களில் பயன்படுத்துகின்றனர். எனவே நமக்கு தேவையான பொருட்களை வாங்கும்போது இந்த விளம்பர உத்தியை தெளிவாக உணர்ந்து செயல்பட வேண்டும். குறிப்பாக சிற்றுந்து போன்ற மிக பெரிய செலவுகளை செய்யும்போது சற்று பகுத்தாய்ந்து முடிவுகளை மேற்கொள்வது சிறந்தது.