• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-20 10:57:13    
லீயு சியாங்கின் புதிய நிலைமை

cri
சீனாவின் புகழ் பெற்ற 110 மீட்டர் ஆடவர் தடைதாண்டும் ஓட்டவீரர் லீயு சியாங் முழுவதும் குணமடைவதற்கு ஏற்ற பயிற்சியை மீட்டுள்ளார். ஆனால், போட்டியில் கலந்துகொள்ளும் காலம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. லீயு சியாங்கின் பயிற்றுவிப்பாளர் சாங் ஹெய்பிங் 12ம் நாள் பெய்சிங்கில் 2009ம் ஆண்டு பெய்சிங் சர்வதேச தொலைதூர ஓட்ட விழாவின் துவக்க விழாவில் கலந்துகொண்ட போது, இவ்வாறு தெரிவித்தார்.

லீயு சியாங் முழுவதும் குணமடைவதற்கு பயிற்சியை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்கின்றார். தற்போதைய நிலைமையைப் பார்க்கும் போது, பயிற்சியின் சிறப்பான பயனையை அவர் பெறுவார். ஆனால், அவரது உடல் சீரான நிலைமையை முழுவதுமாக எட்டவில்லை. எனவே, அவர் போட்டியில் கலந்துகொள்ளஇயலாது.
லீயு சியாங்கின் உடல் நிலைமையின் படி, உகந்த பயிற்சி திட்டத்தை சாங் ஹெய்பிங் இயற்றுவார். இவ்வாண்டு ஆகஸ்டு திங்கள் நடைபெறும் உலக தடகள சாம்பியன் போட்டி, செப்டம்பர் திங்கள் நடைபெறும் ஷாங்காய் தடகள தங்கப் போட்டி, அக்டோபர் திங்கள் நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றின் ஒன்று லீயு சியாங் கலந்துகொள்ளும் முதலாவது போட்டியாக மாறக் கூடும் என்றும் அவர் கூறினார்.

2008ம் ஆண்டு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, 2010ம் ஆண்டு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஆகியவற்றை அடுத்து, 2010ம் ஆண்டு குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி, சீனாவில் நடைபெறும் முக்கிய சர்வதேச நிகழ்ச்சியாகும். குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பல்வேறு ஆயத்தப் பணிகளும் சுறுசுறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2010ம் ஆண்டில், உலக மக்களுக்கு தலைசிறந்த ஆசிய விளையாட்டுப் போட்டியை குவாங் சோ வழங்கும். குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழுவின் துணை தலைமைச் செயலாளர் Gu Shiyang எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்தபோது, இவ்வாறு கூறினார்.

2010ம் ஆண்டு குவாங் சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு சீன அரசு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகின்றது. 2005ம் ஆண்டு ஜூலை 23ம் நாள், சீனத் தேசிய விளையாட்டு ஆணையத்தின் தலைவர் Liu Peng தலைவராகவும், குவாங் தூங் மாநிலத்தின் தலைவர் Huang Huahua செயல் தலைவர்களாகவும் அமையும் இப்போட்டிக்கான ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது. தற்போது, 16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழு, சீனத் தேசிய விளையாட்டு ஆணையம் மற்றும் ஆசியாவின் பல்வேறு தனித்தனி அமைப்புகளுக்கிடையிலான செயல்பாடுகளை முழுமையாக ஒன்றிணைந்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியின் திடல்கள் மற்றும் அரங்குகளின் ஆக்கப்பணி, விளையாட்டு ஏற்பாடுகள் ஆகிய பல்வேறு துறை பணிகளுக்கான ஆயத்தப் பணிகள் சுமூகமாக நடைபெறுகின்றன.