சீன கடற்படை உருவாக்கப்பட்ட 60வது ஆண்டு நிறைவை கொண்டாடும் பன்னாட்டு கடற்படை நடவடிக்கை 20ம் நாளிரவு சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள சிங் தாவ் நகரில் துவங்கியது.
இணக்கமான கடல் என்பது இந்நடவடிக்கையின் பெயராகும். கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, இணக்கமான கடல் சூழலை உருவாக்குவது என்பன இப்பயிற்சியின் முக்கிய நோக்கங்களாகும். ரஷிய கடற்படையின் தலைமை ஆணையாளர், அமெரிக்க கடற்படை தலைவர் உள்ளிட்ட 29 நாடுகளின் கடற்படை பிரதிநிதிக் குழுக்கள் மற்றும் 14 நாடுகளின் 21 பல்வகை போர்க் கப்பல்கள், இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் என்று அறியப்படுகின்றது.
|