• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-21 14:56:00    
பண்டைய "ஹெது ஆல" நகரம் (ஆ)

cri

பண்டைய "ஹெது ஆல" நகரத்தின் காட்சிப் பிரதேசத்தில், 33 பண்டைய கட்டிடங்கள் இருக்கின்றன. இக்காட்சிப் பிரதேசம், பண்டைய "ஹெது ஆல" நகரம் என்னும் காட்சி இடம், சீன மன் இனத் தேசிய பண்பாட்டு காட்சி இடம் என இரண்டாக பிரிக்கப்படுகின்றன.

பண்டைய "ஹெது ஆல" நகரம் என்னும் காட்சி இடத்தில், முன்பு பேரரசர் Nuerhachi ஆட்சி புரியத் துவங்கிய போது, தங்கியிருந்த ச்சின்லுவன்தியன் மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களை காணலாம்.

சீன மன் இனத் தேசிய பண்பாட்டு காட்சி இடத்தில், பேரரசர் Nuerhachiயின் ஃபூமா எனும் மாபிளை மண்டபம், திசாங் என்னும் கோயில் வணிகர்களின் பாதை, மன் தேசிய இன பண்பாட்டு அருங்காட்சியகம் முதலிய பண்டைய கட்டிடங்கள் இருக்கின்றன.

"ஹெது ஆல" நகரத்தின் கிழக்கிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் இரண்டு நீண்ட கால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களை காணலாம். அவை, திசாங் கோயில் மற்றும் சியன்யோ மண்டபம் ஆகியவையாகும்.