• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-21 11:22:49    
கோழியிறைச்சி கலப்பு உணவு வகை

cri
க்ளீட்டஸ் – இன்று வாணி, க்ளீட்டஸ் இருவரும் உங்களுக்கு இன்னொரு சுவையான சீன உணவு வகை பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
வாணி – க்ளீட்டஸ், நமது நேயர்களில் கோழி இறைச்சியை விரும்பியவர்கள் அதிகம்.
க்ளீட்டஸ் – ஆமாம், கோழியிறைச்சி கலப்பு உணவு வகை பற்றி கூடுதலாக அறிமுகப்படுத்துமாறு பல நேயர்கள் கோரினர்..
வாணி – இன்றைய நிகழ்ச்சியில் அவர்களுக்கு ஒரு சிறப்பு உணவு வகை பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
க்ளீட்டஸ் – நல்லது. அதன் சீனப் பெயர் என்ன?
வாணி – சீனப் பெயர் ji rou ban fan. கோழியிறைச்சியும் சோறும் கலந்த உணவு தான் இது.
க்ளீட்டஸ் – சரி, தேவையான பொருட்களை எடுத்துக் கூறுங்கள்.
வாணி –- கோழியிறைச்சி கால் கிலோ
சமையல் மது 2 தேக்கரண்டி
சமையல் எண்ணெய் 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 1
கேரட் 1
வெங்காயம் 1
பச்சை காளாண் 100 கிராம்
உப்பு போதிய அளவு
சோயா சாஸ் போதிய அளவு
சீரகம் சிறிதளவு
வாணி – முதலில், கோழியிறைச்சியை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். கடையில் கோழியிறைச்சி துண்டுகளை நேரடியாக வாங்கினால் நல்லது. சமையல் மதுவை கோழியிறைச்சி துண்டுகளில் ஊற்றி, கொஞ்சம் பிசையவும்.
க்ளீட்டஸ் – காளாண், பச்சை மிளகாய், வெங்காயம் கேரட் ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்யுங்கள். வெங்காயத்தை மெல்லிய நூடுல்ஸ் போல் நறுக்கிக் கொள்ளுங்கள். காளாண், பச்சை மிளகாய், கேரட் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

வாணி – அரிசியை சுத்தம் செய்யுங்கள்.
க்ளீட்டஸ் – பிறகு, வாணலியை அடு்ப்பின் மீது வைத்து, சமையல் எண்ணெயை அதில் ஊற்றவும்.
வாணி – முதலில், கோழியிறைச்சியையும், வெங்காயத்தையும் வாணலியில் கொட்டி வதக்கவும். பிறகு, கேரட், காளாண், பச்சை மிளகாய் ஆகியவற்றை முறையே இதில் கொட்டி வதக்கவும்.
க்ளீட்டஸ் – இப்போது, சோயா சாஸ், உப்பு சீரகம் ஆகியவற்றை வாணலியில் சேர்க்க வேண்டுமா?

வாணி – ஆமாம். சேர்க்கலாம். வீட்டில் சோயா சாஸ் இருந்தால், 1 தேக்கரண்டி அளவை இதில் ஊற்றவும். இப்படி தயாரிக்கப்பட்ட உணவு வகையின் நிறம் மேலும் அழகானது.
க்ளீட்டஸ் – வேறு ஒரு வாணலியில் சாறு தயாரிக்க வேண்டும். அப்படியா?
வாணி – ஆமாம், நீங்கள் அரிசியின் அளவுக் கேற்ப, தண்ணீரை இதில் ஊற்றவும். பிறகு, சாதாரண வழி முறையில் சோறு தயாரிக்கலாம்.
க்ளீட்டஸ் –சோறு தயாராகிய பின், தயாரிக்கப்பட்ட கோழியிறைச்சி, காளாண், கேரட் முதலியவற்றை சோற்றுடன் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

வாணி – இன்று தயாரித்த கோழியிறைச்சிச் சோறு, திருமணம் செய்யாத வேலையில் பரபரப்பாக ஈடுபடும் மக்களுக்கு பொருத்தமானது. தயாரிப்பு முறை எளிதானது. காய், இறைச்சி முதலியவை இடம்பெறும் இத்தகைய சோறு சாப்பிட்டால் சமநிலையிலான சத்துணவு கிடைக்கலாம்.
க்ளீட்டஸ் – ஆமாம், நேரம் இருந்தால், ஒரு எளிதான சூப் தயாரித்து கொண்டால், மேலும் சிறப்பானது.
வாணி – சரி, நிகழ்ச்சியைக் கேட்டதற்கு நன்றி. கடிதம் மூலம் சீன உணவு வகைகளைத் தயாரிப்பது பற்றிய உங்கள் அனுபவங்களை எழுதி அனுப்பி, எங்களோடு பகிர்ந்து கொள்வதை வரவேற்கின்றோம்.