• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-23 14:48:52    
வூஹான் தூங் ஹூ செர்ரி மலர் பூங்கா

cri

வூஹான் பல்கலைக்கழகத்தின் அருகிலுள்ள தூங் ஹூ செர்ரி மலர் பூங்கா, செர்ரி மலர்களைப் பார்த்து ரசிக்கக்கூடிய மற்றொரு சிறப்பு இடமாகும். ஆண்டுதோறும் வசந்தகாலத்தில் இப்பூங்கா, செர்ரி மலர் விழாவையும், பல பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது. உலகில் மூன்று பெரிய செர்ரி மலர் பூங்காக்களின் நிழற்படக் கண்காட்சி, செர்ரி மலர்கள் பற்றிய பொது அறிவு கண்காட்சி முதலியவை இதில் இடம்பெறுகின்றன. குறிப்பாக, இரவில், இந்த மலர்களைக் கண்டு ரசிப்பதை, காதலர்கள் மிகவும் வரவேற்கின்றனர். இந்நடவடிக்கையில், ஒலி, ஒளி, மின்னாற்றல் ஆகிய அறிவியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, செர்ரி மரங்களின் கீழ், பல்வகை வண்ணமயமான விளக்குகள் வைக்கப்பட்டன. பயணிகள் அழகான மலர்கள் மற்றும் விளக்கு ஒளியுடன் ரம்மியமான உணர்வைக் கொள்ளலாம். வூஹான் அறிவியல் தொழில் நுட்ப கழகத்தைச் சேர்ந்த வாங் சுவென் கூறியதாவது:
இன்றைய வானிலை நன்றாக இருக்கிறது. நாங்கள் சாதாரண காலத்தில் பள்ளியில் தங்கியிருக்கின்றோம். நேரம் இருந்த போது வெளியே சென்று, வசந்தகாலத்தை உணர்ந்துகொள்கின்றோம் என்று அவர் தெரிவித்தார்.
வூஹான் நகரத்தின் ஹோங்சான் பிரதேசத்தின் முதியோர் பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் லுஹுவேய்பாஃங் அம்மையார் தமது சக மாணவர்களுடன் இணைந்து நிழற்படங்களை எடுத்தார். அவர் கூறியதாவது:
நாள்தோறும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அழகான செர்ரி மலர்களைப் பார்த்து ரசித்தால், எங்கள் வாழ்க்கை ரம்மியமானதாக மாறும் என்று அவர் கூறினார்.

தூங்ஹூ செர்ரி மலர் பூங்காவின் மொத்த பரப்பளவு, 10 ஹெக்டர் ஆகும். இதில் செர்ரி மலர் மரங்களின் எண்ணிக்கை 5000ஐ எட்டியது. செர்ரி மலர்கள் பூக்கும் காலத்தில், பயணிகள் இப்பூங்காவில் ரம்மியமான சூழ்நிலையை உணர்ந்து கொள்ளலாம். தூஹு செர்ரி மலர் விழா, வூஹான் நகரத்தின் சுற்றுலாவில் ஒரு முக்கிய அம்சமாக மாறியுள்ளது என்று இப்பூங்காவின் தலைவர் வாங் சிங்ஹுவா கூறினார்.
சனி மற்றும் ஞாயிற்றுகிழமைதோறும், பொதுவாக 30 ஆயிரம் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். பயணியரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சீனாவிலுள்ள ஜப்பானிய தொழில் நிறுவனங்களின் பணியாளர்கள் எமது பூங்காவில் சுற்றுலாப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.