• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-22 16:42:49    
2009ம் ஆண்டு 5 தடகள கலப்பு போட்டி

cri
2009ம் ஆண்டு 5 தடகள கலப்பு போட்டியின் ஆடவர் பிரிவின் ஆட்டம் 20ம் நாள் முடிவடைந்தது. புகழ்பெற்ற செக் வீரர் போலிவ்கா, ஓட்டம் மற்றும் கை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் சீராக விளையாடி, சாம்பியன் பட்டம் பெற்றார். சீன வீரர்கள் வாங் குங், லி லின் முறையே, 13 மற்றும் 30வது இடத்தைப் பிடித்தனர்.

20ம் நாள் வெளியிடப்பட்ட உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில், சீனாவின் வீராங்கனை சேன் ச்சியே தொடர்ந்து 16வது இடத்தை வகிக்கின்றார். லி நா. 30வது இடத்தில் இருக்கிறார். போங் சுயை 33வது இடத்தில் உள்ளார்.
ரஷியாவின் புகழ் பெற்ற வீரர் சபினா முதலிடத்தில் உள்ளார்.
NBA அமெரிக்க தேசிய கூடைப்பந்து சங்கத்தின் இவ்வாண்டு தொடர் போட்டிகளில், இவ்வாண்டின் NBA தொடர்ப்போட்டியின் மிகச் சிறந்த சாதனையை பெற்ற, தமது அணியின் வரலாற்றிலும் மிகச் சிறந்த சாதனையை உருவாக்கிய CLEVELAND CAVALIERS அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் பிரவுன், 2008 2009ம் ஆண்டுக்கான மிகச் சிறந்த தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

38 வயதான மைக் பிரவுன், தலைமையிலான CLEVELAND CAVALIERS அணி ஆடிய 82 ஆட்டங்களில், 66 வெற்றி 16 தோல்வி என்ற மிகச் சிறந்த சாதனையை பெற்றது. நடப்பு போட்டியில் இறுதிகட்ட சாம்பியன் பட்டத்தை CLEVELAND CAVALIERS அணி வெல்லக்கூடிய சாத்தியக்கூறு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
20ம் நாள் நடைபெற்ற NBA கூடைபந்து சங்கத்தின் இவ்வாண்டு சாம்பியன் பட்டத்துக்கான காலிறுதிச் சுற்றில் LOS ANGELES LAKERS அணி, 113-100 என்ற புள்ளிகள்கணக்கில் UTAH JAZZ அணியை தோற்கடித்தது.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் உள் நாட்டிலான தீபத்தொடரோட்டத்தின் முதல் தீபக்கோலை, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அருங்காட்சியகத்தின் ஆயத்த பணியகத்துக்கு சீனாவின் புகழ் பெற்ற தடகள வீரர் லியு சியாங், ஷாங்ஹாய் மாநகரில், 20ம் நாள் வழங்கினார். இவ்வாண்டு இறுதியில் திறக்கப்பட இருக்கின்ற இவ்வருங்காட்சியகத்தில், முக்கியத்துவம் வாய்ந்த இத்தீபக்கோல் வைக்கப்படும். அப்போது, பொது மக்கள், இத்தீபக்கோலை அருகே, பார்க்கலாம்.
2008ம் ஆண்டு மார்ச் 31ம் நாள், லியு சியாங், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் உள் நாட்டிலான தீபத்தொடரோட்டத்தின் முதல் தீபம் ஏந்துபவரான முறையில், சீன அரசுத் தலைவர் ஹூ ச்சின் தாவிடமிருந்து புனிதமான ஒலிம்பிக் தீபக்கோலை ஏற்றுக்கொண்டார்.