சீன மக்கள் விடுதலை படையின் கடற்படை நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவை முன்னி்ட்டு பன்னாட்டு கடற்படைகள் பங்கெடுக்கும் நடவடிக்கை 20ம் நாள் முதல் சான் துங் மாநிலத்தின் சிங்தாவ் நகருக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் துவங்கியது. சீனக் கடற்படையின் துணை தளபதி திங் யீபிங் 22ம் நாள் எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். இணக்கமான கடற்சூழலை உருவாக்குவது பற்றி பன்நாட்டு கடற்படைகள் கூட்டாக விவாதித்து பயன் தரும் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் ஒரு முக்கிய வாய்ப்பு இந்நடவடிக்கையாகும் என்று அவர் கூறினார். நடவடிக்கையில் பல்வேறு நாடுகளின் கடற்படைகளுக்கிடை பரிமாற்றம் சமூகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது உரை 3 கடற்படை ஒரு சர்வதேச தன்மை வாய்ந்த படை வகையாகும். கொடி மொழி, தகவல் அறிகுறி முதலியவை பல்வேறு நாடுகளின் கடற்படைகளுக்கிடையில் ஒரே மாதிரியாகும். பொது உள்ளடக்கத்தைக் கண்டறிந்து கருத்து வேற்றுமைகளை ஒதுக்கிவைப்பது மூலம், இணக்கமான கடற்சூழல் என்ற பொது நிலைமையைப் பேணிக்காக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
|