• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-24 09:46:34    
2009 உலக ஸ்னூக்கர் சாம்பியன் பட்டப்போட்டி

cri
2009ம் ஆண்டு உலக ஸ்னூக்கர் சாம்பியன் பட்டப்போட்டி, 20ம் நாள் 3வது நாளாக பிரிட்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் 3 சீன வீரர்கள் கலந்துகொண்டனர். இரு சீன வீரர்களுக்கிடையிலான போட்டியில், தின் ச்சுன் ஹூய், 5-4 என்ற ஆட்டக்கணக்கில் அவர்தம் அணிதோழர் லியாங் வேன் போவை விட முன்னிலையில் உள்ளார். பிரிட்டன் நேரப்படி 21ம் நாள் முற்பகல், இருவரும், கடைசி 10 ஆட்டங்களை விளையாடுவர். சீன ஹாங்காங்கைச் சேர்ந்த ஃபூ ச்சியா ச்சுன், 10-4 என்ற ஆட்டக்கணக்கில் ஸ்வேல்லை தோற்கடித்தார். அவர் முதல் முறையாக 16வது இடங்களில் நுழைந்துள்ளார்.

2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க உலகப் கோப்பை கால்பந்தாட்டத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விற்பனை செய்வதில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் 270 கோடி அமெரிக்க டாலரை பெறும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர் 20ம் நாள் வெளியிட்டார். நடப்பு கால்பந்து உலகக் கோப்பை, ஆப்பிரிக்காவில் நடைபெறுவதால், ஆப்பிரிக்காவிலான தொலைக்காட்சி ஒளிபரப்பு விகிதம், பெருமளவில் அதிகரிக்கும்.

2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பை கால்பந்தாட்டப்போட்டி, 2010ம் ஆண்டு ஜூன் 11ம் நாள் துவங்கும். இத்தகைய போட்டி, ஆப்பிரிக்காவில் நடைபெறுவது, இதுவே முதன்முறையாகும்.
19ம் நாள் நடைபெற்ற சீன தேசிய ஒத்தியக்க நீச்சல் போட்டி மற்றும் சீன தேசிய விளையாட்டுப் போட்டிக்கான தேர்வுப் போட்டியின் இறுதிப்போட்டியில், பெய்ஜிங் அணி, 96.333 என்ற புள்ளிகளை கொண்டு, சாம்பியன் பட்டம் பெற்றது. 3 நாள் நீடித்த இப்போட்டியில், சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 9 அணிகளின் 106 வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

19ம் நாள் இரவில் முடிவடைந்த சீன ஆடவர் கூடைப்பந்து போட்டியின் அரை இறுதிப்போட்டியில், சின் ச்சியாங் அணி, 97-90 என்ற புள்ளிகள்கணக்கில், ச்சியாங் சு அணியை தோற்கடித்தது. 3-1 என்ற வெற்றியை கொண்டு, இறுதிப் போட்டியில் நுழைந்தது. இறுதிப்போட்டியில் சின் ச்சியாங் அணி, குவாங் துங் அணியுடன் மோதும்.
2009ம் ஆண்டு 5 தடகள கலப்பு போட்டியின் ஆடவர் பிரிவின் ஆட்டம் 20ம் நாள் முடிவடைந்தது. புகழ்பெற்ற செக் வீரர் போலிவ்கா, ஓட்டம் மற்றும் கை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் சீராக விளையாடி, சாம்பியன் பட்டம் பெற்றார். சீன வீரர்கள் வாங் குங், லி லின் முறையே, 13 மற்றும் 30வது இடத்தைப் பிடித்தனர்.