• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-23 22:49:27    
பன்னாட்டுப் போர் கப்பல்களின் அணி வகுப்பு

cri

சீன மக்கள் விடுதலைப் படையைச் சேர்ந்த கடற்படை நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டுப் பன்னாட்டு போர் கப்பல்களின் அணி வகுப்பு 23ம் நாள் பிற்பகல் சீனாவின் கடலோர நகரான சிங் தாவுற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஹுச்சிந்தாவ் சீன கடற்படையின் போர் கப்பல் அணி வகுப்பு மரியாதையையும் பன்னாட்டு போர் கப்பல் அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார்.


சீனின் என்னும் சீன ஏவுகணை விரை கப்பலின் தலைப்பில் ரஷியாவின் வாலாங்க வலம்வரும் கப்பல், அமெரிக்காவின் பிஃஸ்ச்செலாட் விரை கப்பல் உள்ளிட்ட 14 நாடுகளின் 21 போர் கப்பல்கள் அணி என்ற வடிவத்தில் கடற்பரப்பில் நின்ற வண்ணம் தலைவர் ஹுச்சிந்தாவின் பார்வையை ஏற்றுக் கொண்டன. பிற்பகல் 3 மணியளவில் அணி வகுப்பு மரியாதை நிறைவடைந்த பின் கப்பல் அணிகள் திட்டத்தின் படி கடற்கரைக்கு திரும்பின. 4 நாள் நீடித்த கடற்படை நடவடிக்கை இனிதே நிறைவடைந்தது.


நான்கு நாள் நடவடிக்கைகளில் பன்னாட்டுத் தளபதிகளும் படைவீரர்களும் தொடர்பை வலுப்படுத்தி பரிமாற்றத்தையும் புரிந்துணர்வையும் மேலும் ஆழமாக்கியுள்ளனர். அமைதி இணக்கம் மற்றும் ஒத்துழைப்பை உருவாக்குவது இந்நடவடிக்கையின் தலைப்பாகும். இந்நடவடிக்கையில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் தளபதிகளும் இந்த நடவடிக்கைக்கு உயர்வான மதிப்பை வழங்கினர். பாகிஸ்தான் படையின் முதன்மை தலைவர் பசீர் பேட்டியளிக்கையில் இந்த தலைப்பிலான் நடவடிக்கை சீன கடற்படை நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்கு ஏற்றது. இது தற்போதைய கடல் பாதுகாப்பு நிலைமையை உரிய முறையில் எடுத்து காட்டுகின்றது. பல்வேறு நாடுகளின் பொது எதிர்பார்ப்பையும் இந்த நடவடிக்கையின் தலைப்பு காட்டுகின்றது என்று கூறினார்.


அணி வகுப்பு மரியாதை துவங்குவதற்கு முன் ஹுச்சின்தாவ் அழைப்பின் பேரில் இந்த நடவடிக்கையில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிக் குழுத் தலைவர்களை சந்தித்துரையாடினார். பல்வேறு நாடுகளின் கடற்படைகளிடையிலான பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது இணக்கமான கடலை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஹுச்சிந்தாவ் சந்திப்பில் தெரிவித்தார். அமைதியான வளர்ச்சி பாதையில் சீனா ஊன்றி நின்று இப்போது அல்லது எதிர்காலத்தில் எந்த அளவிலும் சீனா  ஆதிக்கம் நாட வில்லை. கடற்படை உள்ளிட்ட சீன மக்கள் விடுதலை படைப் பிரிவுகள் அனைத்தும் உலகின் அமைதியை பேணிகாத்து கூட்டு வளர்ச்சியை முன்னேர்றுவதற்கான முக்கிய சக்தியாக விளங்கும் என்று ஹுச்சிந்தாவ் தெரிவித்துள்ளார்.