• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-24 14:07:24    
சுவாங் இனத்தின் விழாக்கள் 5

cri
மருத்துவ மன்னர் விழா

லுங் சாங் தன்னாட்சிப் மாவட்டத்திலான சுவங் இன மக்கள், சந்திர நாட்காட்டியின்படி 5ம் திங்களின் 5ம் நாளில் இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். விழாவின் போது அவர்கள் மலையிலிருந்து சில சீன மருந்து மூலிகைகளை திரட்டி குளிக்கின்றனர். இதன் மூலம், தோல் நோயின்றி சமதளமாக மாற முடியும்.

குரங்கு விழா

இது, குவாங் சி சுவங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் jingxi மாவட்டத்தின் வேளாண்துறை விழாவாகும். மேற்கூறிய மருத்துவ மன்னர் விழாவை போல் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது. அப்போது, ஒவ்வொரு குடும்பமும், பல்வகை பழங்களையும் உணவுகளையும் கொண்டு மலையிலான குரங்குகளுக்கு வழங்குகின்றன. குரங்குகள் நன்றாக சாப்பிட்டு, அல்லது உணவுப்பொருட்களை கொண்டு சென்ற படிவு செய்த பின்பு தான், மக்கள் அமைதியாக வீட்டுக்கு செல்கின்றனர்.

Ji de விழா

Jide என்றால், சுவாங் மொழியில் சிறிய கோழி என்பது பொருள். இது, குவங்சி debao, jingxi,nabo முதலிய மாவட்டங்களில் கொண்டாடப்படுகின்ற குழந்தைகளுக்கான விழாவாகும். விழாவுக்கு முந்தைய சில நாட்களில், பாட்டி, பேரக் குழந்தைகளுக்கு ஒரு கிலோகிராம் எடையுள்ள சிறிய கோழியையும் ஒரு கூடை அரிசியையும் வழங்குவது வழக்கம். விழாவின் போது, அதிகாலையில் பெற்றோர் கோழியைச் சமைத்து வண்ண சோறு தயாரிக்கின்றனர். குழந்தைகள், அவர்களின் வயதை ஓடிய நண்பர்களை வீட்டுக்கு அழைத்து உணவுப்பொருட்களைச் சாப்பிடுகின்றனர். பிறகு, அவர்கள் பழங்களை பகிர்ந்து கொண்டு மாலையில் அவரவர் வீட்டுக்குத் திரும்புகின்றனர்.

Jiebai விழா

இது 5ம் திங்களின் 13ம் நாளில் நடைபெறுகின்ற பாரம்பரிய விழாவாகும். 12 வயதிற்கு அதிகமான நண்பர்கள் இருவர்(ஆண்கள்), இந்த விழா மூலம் சகோதரர்களாக மாற முடியும். அப்போது, முதியவர் ஒருவர் விழாவுக்குத் தலைமை தாங்க, இருவரும் கோழி ரத்தத்தைக் குடித்து நம்பிக்கையான நண்பர்களாக இருக்க உறுதிமொழியளிக்கின்றனர். விழாவுக்கு பின் இருவரும் சகோதரர்கள் போன்ற நெருக்கமான நண்பர்களாக மாறுகின்றனர்.